மணல் ஒப்பந்தக் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த குற்றம் நீதிமன்றத்தில் விவாதம்
தமிழ்நாட்டில் அதிகார வரம்பை மீறி அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத் துறை செயல்படுவதாக தமிழ்நாடு அரசு ஊழலுக்கு ஆதரவாகத் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்தக் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அலுவலர்கள் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல் வியபாரத் தொழில் நடத்தும் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி குத்தகைதாரர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள அரசு நீர்வளத்துறை அலுவலகம் உள்ளிட்ட 34 இடங்களில் நடந்த சோதனை
இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த நிலையில் மணல் குவாரி அதிபர் இராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்களின் வீடுகளிலிருந்து அவர்கள் கணக்கில் காட்டாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூபாய்.12.82 கோடி ரொக்கமாகப் பணம், ரூபாய்.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சோதனையைத் தொடர்ந்து பத்து மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறையின் சார்பில் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்தப் பின்புலத்தில் பத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.மனுவில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவளச் சட்டம் சேர்க்கப்படாத நிலையில்,
மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரவரம்பு இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனுவை அவசா வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மத்திய அரசின் நியமனம் ஆகும் இவர்கள் அமலாக்கத் துறை மீது குற்றம் சாட்டும் நிலையில் இந்த வழக்கு குறித்து சட்ட ரீதியிலான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளதுஇன்று நடந்த விசாரணையில் விசாரணைக்கு ஆஜராகக்கூடாது என நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் நிர்பந்தித்தார் : என அமலாக்கத்துறை தகவல்
கருத்துகள்