தமிழ்நாட்டில் 11 காவலதுறை அதிகாரிகள் பணியிடமாற்றம்!
கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பாளர்கள் ! தமிழ்நாடு உள்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா IAS வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனாவும் .
திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக பிரதீப்பும்.
திண்டுக்கல் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐஜியாக பிரமோத் குமாரை நியமித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டிஜிபியாக கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜியாக தமிழ் சந்திரனும்.
கோயமுத்தூர் மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாக சந்திரசேகரனும்.
சிறைத் துறை கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாளும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎல் நிறுவனத் தலைமை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அலுவலராக அம்ரேஷ் புஜாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் துறை இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு காவல்துறை துணை ஆணையராக பாலாஜியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கருத்துகள்