முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நயன்தாராவுக்காக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தாரா.? உண்மை நிலவரம்

நயன்தாராவுக்காக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் பதவியை ராஜினாமா செய்தாரா.?


உண்மை நிலவரம் ?                  திரைபட உலக முன்னணி நடிகை நயன்தாரா கேரளாவில் பிறந்தவர் கலை ஆர்வத்தில் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் உடன் ஐயா படத்தில் நடிக்கத் துவங்கி தற்போது வரை அவர் பல திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் இந்த நிலையில் நடிகை நயன்தாராவால் ஏற்பட்ட பிரச்சனை  ஒன்று  சொல்லலாம். அதாவது 

நயன்தாரா நடிப்பில் கடந்த மாதம்  அன்னபூரணி எனும் திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  29 ஆம் தேதி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அது ஹிந்து மதத்தைப் புண்படுத்தும் விதமாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகளும்  அமைக்கப்பட்டுள்ளதாகவே புகார் எழுந்தது


தொடர்பாக ரமேஷ் சோலங்கி என்ற நபர் மும்பை எல்டி பார்க் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவலர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவான ஒரு இளைய அமைச்சர் மூலம்  தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல்  வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலையிட்டதாலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஒரு தகவல் செவிவழிச் செய்தியாகப் பரவி வெளியாகியது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாகவும் வெளியில்  சொல்லப்படுகிற நிலையில், தலைமைக் குற்றவியல்  வழக்கறிஞர் பதவி விலகியதன் பின்னணிக் காரணத்தை அரசியல் விமர்சகர்கள் சிலர் தெளிவுபடுத்தியுள்ளார்.


"நடிகை நயன்தாரா மீது போடப்பட்டுள்ள வழக்கில் வாதாட தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அரசின் தலைமைக் குற்றவியல்  வழக்கறிஞர் ஒருவரை அனுப்பியுள்ளார் அந்த இளைய வாரிசு அமைச்சர்  எனத் தகவல் அரசியல் விமர்சகர்கள் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு தகவலாக, அமைச்சர்கள் தற்போது ஊழலில் சிக்கி வந்த நிலையில் அவர்களது வழக்கு தோல்வியில் முடிந்ததால் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிச் சொன்னதாகவும்" அதன் காரணமாகவே பதவி ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல்லும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் போதிலும் .



ஏற்கனவே, நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கு இயக்குனராகவும்  பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் நடிகை நயன்தாராவிற்காக தான் என சில தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதனால் தான் நடிகைக்கு ஆதரவு  வழக்காடிய வழக்கறிஞர் பதவி இராஜிநாமாவா என எதிர்கட்சியினர் வினா ஆதாரம் வெளியாகும் வரை அமைதிதாகவே பேசப்படும் நிலை உள்ளது

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ள


தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயண் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றதும் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்தது.  அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரத்தை நியமிக்க 2021 ஆம் ஆண்டு  மே மாதம் ஒப்புதல் வழங்கியதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் சட்ட ஆலோசகராகவும், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குகளை திறம்படக் கையாண்டு வந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொடர்ந்து தொழில் புரியப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

அதற்கு முன்னதாக, தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்ததையடுத்து, ஒருசில நாட்களில் தமிழ்நாடு அரசு புதிய தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     




        Central board for film certification.  திரைப்டம் ஓடுவதற்கு தனிக்கை குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரு மாதமாக திரையரங்குகளில் ஓடிமுடித்து எந்த பிரெச்சனையையும் சந்திக்காத ஒரு திரைப்படம். Netflixல் வெளியாகி இந்தியா முழுவதிலுமுள்ள பார்வையாளர்கள் பார்க்கத்துவங்கிய ஒரு வாரத்திலேயே தடை செய்யப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.



முதலில் இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குறிய  எந்தவொரு காட்சியும் இல்லை. எல்லா மதத்தினரையும் மதிக்கும் அளவில் தான் கதையும் கதாபாத்திர வடிவமைப்பும் இருக்கும். 

கோவில் குருக்களின் மகள் சமையல் கலையில் வல்லுனராக முயற்சிக்கிறாள். சமையலில் இருக்கும் ஆர்வத்தினால் அசைவ உணவு சமைக்கும் நிலை ஏற்படுகிறது. அசைவம் சமைக்கிறாள்.

இதை மிக எளிதில் கடந்துவிட முடியாது. இது எல்லோருக்குமான எச்சரிக்கை. இந்தப் படத்தை re-edit செய்தால் மட்டும் தான் மீண்டும் Netflixல் அனுமதிப்பார்கள்




.பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்  மீன் குழம்பு சமைப்பாள். இது தான் எதார்த்த நிலையா?. 

The Kerala storyயும், The Kashmir files ம் இந்த சமுதாயத்தில் விதைத்த விஷத்தை விட, அண்ணபூரனி எந்த விதத்திலும் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கவில்லை எனவும் விவாதம் வருகிறது



இன்றய அளவில் கதைகள் சொல்ல தமிழ்நாட்டை விட பாதுகாப்பான இடம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இதற்கு காரணம் என்னவென்று நான் சொல்லி எல்லோருக்கும் புரிய வேண்டிய அவசியமில்லை. 


More Power to you Nilesh Krishnaa. All of us are with you. I wish you make a much bolder statement with your next movie. 

"Art should comfort the disturbed and disturb the comfortable"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...