பாதுகாப்புப் படையினருக்கான மருத்துவ சேவை பிரிவு, ஐஐடி ரூர்க்கி ஆகியவை பணியிலிருக்கும் வீரர்களின் மருத்துவ சிகிச்சை, நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் இணைந்து செயல்படவுள்ளன
பாதுகாப்புப் படையினருக்கான மருத்துவ சேவை பிரிவு, ஐஐடி ரூர்க்கி ஆகியவை பணியிலிருக்கும் வீர்ர்களின் மருத்துவ சிகிச்சை, நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றுபுரிந்துணர்வு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஐஐடி ரூர்க்கி இயக்குநர் பேராசிரியர் கமல் கிஷோர் பந்த், பாதுகாப்புப் படையின் மருத்துவ சேவைப் பிரிவு தலைமை இயக்குநர் சார்பில் லெப்டினென்ட் ஜெனரல் எஸ் கே சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டு உயிரி மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி தவிர, ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு துறையில் புதிய தொழில்களை ஊக்குவித்தல் ஆகியவையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ளன.
அத்துடன் பாதுகாப்புப்படை மருத்துவ சேவைகள், ஐஐடி ரூர்க்கியின் நிபுணத்துவத்தை புதிய மருத்துவ சாதனங்களின் மேம்பாடு, ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்த முடியும்.
கருத்துகள்