நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்க சென்னை ஐஐடி அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்களின் உச்சி மாநாட்டை நடத்துகிறது
அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள இம்மாநாட்டை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி விவகார குழுமம் நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில்
காணொலிக் காட்சி வாயிலாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றினார், அப்போது அவர் ஆராய்ச்சி, உதவித்தொகை, புதுமைக் கண்டுப்பிடிப்புகள், தொழில் முனைவோர் ஆகியவை இந்தியாவில் விவாதிக்கப்படும் அம்சமாக இருப்பதால், இது இனி வெளிப்புற கருத்துக்களாக அமையாது என்று அவர் கூறினார்.
தற்போது புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவது இயல்பான ஒன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு கல்லூரியும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு இளைஞரும், தனது எதிர்காலத்தைப் பற்றி கனவு காணும்போது, வேலை பெறுதல், ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுதல் அல்லது கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது அல்லது கல்விக்காக உள்நாட்டில் பயணிப்பது போன்ற சமமான முக்கியமான வாய்ப்புகளில் ஒன்றை பெறுகிறார்கள் என்று திரு திரு ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
கருத்துகள்