தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, 2022 மார்ச் 31-உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி – தமிழ்நாடு அரசின் இணக்கத் தணிக்கை (வருவாய்) அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதன்மைத் தலைமைக் கணக்காளர் (தணிக்கை-I) திரு சி நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்