முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2024 மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் நிறைவுக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது

2024 மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் நிறைவுக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது

2024 மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (01.06.2024) நடைபெறுகிறது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும்.  கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையில் 6 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.  இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழுகட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும்.


நாளை நடைபெறவுள்ள இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிழல்தரும் பந்தல், குடிநீர், சாய்வுதளம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உரியமுறையில் செய்யப்பட்டுள்ளன.  



வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள  சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடந்த 6 கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர். கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

7-வது கட்ட தேர்தல் தொடர்பான சில தகவல்கள்:

2024 பொதுத் தேர்தலின் ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு 57 மக்கலளவைத் தொகுதிகளுக்கு 2024 ஜூன் 1-ம் தேதி நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். வாக்குப்பதிவு முடியும் நேரம் தொகுதிக்கேற்ப சில இடங்களில் மாறுபடும்.

ஒடிசா சட்டப்பேரவையின் எஞ்சியுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறும்.

இறுதிகட்ட தேர்தலுக்காக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இறுதி கட்டத் தேர்தல் தொடர்பான பணிகளில் 10.9 லட்சம் பணியாளரக்ள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் வாக்களிக்க 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் 5.24 கோடி பேர் ஆண்கள். 4.82 கோடி பேர் பெண்கள். 3574 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

இறுதி கட்ட தேர்தலுக்காக மொத்தம் 172 தேர்தல் பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொகுதிகளுக்கு சென்று பணிகளை கவனித்து வருகின்றனர்.  

இறுதி கட்ட தேர்தல் பணியில் 2707 பறக்கும் படைகள், 2799 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1080 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 560 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும்  பணியில் ஈடுபட்டுள்ளன.

201 சோதனைச் சாவடிகள் மூலம் சர்வதேச எல்லைகளும் 906 சோதனைச் சாவடிகள்  மூலம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வாக்காளரும் எளிதாக வாக்களிக்கும் வகையில் குறைந்தபட்ச வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை இந்த இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் https://electoralsearch.eci.gov.in/

வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர 12 மாற்று ஆவணங்களின் பட்டியலையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒரு வாக்காளர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிப்பதன் மூலம் வாக்களிக்கலாம். மாற்று அடையாள ஆவணங்களுக்கான தேர்தல் ஆணைய உத்தரவுக்கான இணையதள இணைப்பு:   https://tinyurl.com/43thfhm9

வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு சதவீதம் அவ்வப்போது வெளியிடப்படும்.  வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் இரவில் முழுமையான மற்றும் துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். வோட்டர் டர்ன்அவுட் (voterturnout) மொபைல் செயலியில் அனைத்துக் கட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...