“மனித வள மேம்பாட்டில் உலக அளவில் எதிர்காலத்திற்கு தயார் நிலையில் உள்ள நிறுவனத்திற்கான தி எகானாமிக் டைம்ஸ் விருது 2024-25” தேசிய புனல் மின் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
“மனித வள மேம்பாட்டில் உலக அளவில் எதிர்காலத்திற்கு தயார் நிலையில் உள்ள நிறுவனத்திற்கான தி எகானாமிக் டைம்ஸ் விருது 2024-25” தேசிய புனல் மின் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக தலையீடுகள், பன்முகத்தன்மை, சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்முயற்சிகள், நிலையான தொழில்நுட்ப மேம்பாடுகள், ஊழியர் ஈடுபாட்டு நடைமுறைகள், வலுவான பெருநிறுவன நிர்வாக உத்திகள் ஆகியவற்றில் இந்த நிறுவனத்தின் தயார் நிலையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2024, மே 23 அன்று மும்மையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்வில் தேசியப் புனல் மின் கழக இயக்குநர் (ஊழியர் நலன்) திரு உத்தம் லால் விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (மனிதவள மேம்பாடு) திரு லூக்காஸ் குரியா மற்றும் அதிகாரிகள் குழுவினரும், நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்