77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரத் அரங்கு திறக்கப்பட்டது
பிரான்சில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், பல்வேறு பிரிவுகளில் பல அதிகாரப்பூர்வ தேர்வுகளுடன், பாரத் அரங்கு இன்று (15.5.24) திறக்கப்பட்டது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆண்டும் தோறும் மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது. இது தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தாலும், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அரங்கம் தனது வளமான சினிமா பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கும், உலகளாவிய திரைப்படங்களுடன் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
இந்த பிரம்மாண்டமான தொடக்க விழாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவுடன், பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் பங்கேற்றார்.
இந்திய சினிமாவின் சாராம்சத்தை கொண்டாட மதிப்புமிக்க பிரமுகர்கள், புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் ஒன்றிணைந்தனர். தென்னாப்பிரிக்காவின் தேசிய திரைப்பட மற்றும் வீடியோ அறக்கட்டளையின் தலைவர் திருமதி தோலோனா ரோஸ் என்செகே, கேன்ஸ் திரைப்பட விழாவின் துணை பொது பிரதிநிதியான திரைப்படத் துறை இயக்குநர் திரு கிறிஸ்டியன் ஜீன் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ரிச்சி மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் பேசிய திரு சஞ்சய் ஜாஜு, "இந்த ஆண்டு கேன்ஸ் அதிகாரப்பூர்வ தேர்வில் அதிக அளவில் இந்தியத் திரைப்படங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
கருத்துகள்