இந்திரா காந்தி தேசிய கலை மையம் சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கல்விக் கருத்தரங்குடன் கொண்டாடியது
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (ஐ.ஜி.என்.சி.ஏ) பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஆவணக் காப்பகப் பிரிவு, சர்வதேச அருங்காட்சியக தினம் 2024-ஐ நினைவுகூரும் வகையில் 'அருங்காட்சியகங்கள் மற்றும் காப்பகங்கள்: கல்விக்கான ஒரு பொது இடம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை உமாங் கலையரங்கில் நடத்தியது. இக்கருத்தரங்கிற்கு டீன் (நிர்வாகம்) பேராசிரியர் ரமேஷ் சந்திர கவுர், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் துறைத் தலைவர் கலா நிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்வு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஐ.ஜி.என்.சி.ஏ கலாச்சார காப்பகங்களுக்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதையும், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு பயனளிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இக்கருத்தரங்கில் புகழ்பெற்ற பேச்சாளர்களாக டாக்டர் ஆனந்த் புர்தன், துணை டீன் (அகாடமி), அம்பேத்கர் பல்கலைக்கழகம், தில்லி, ஆவணக்காப்பாளர் டாக்டர் கே.சஞ்சய் ஜா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் ஊடக மையத் துணைக் கட்டுப்பாட்டாளர் திருமதி ஸ்ருதி நாக்பால், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் வீரேந்திர பங்க்ரூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச அருங்காட்சியக தினம் என்பது கலாச்சார பரிமாற்றம், கலாச்சார செறிவூட்டல் மற்றும் பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் அமைதியை வளர்ப்பதற்கான முக்கிய வழிமுறையாக அருங்காட்சியகங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள், 'கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகங்கள்' முழுமையான கல்வி அனுபவங்களை வழங்குவதிலும், நனவான, நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகத்திற்காக வாதிடுவதிலும் கலாச்சார நிறுவனங்களின் பங்கை வலியுறுத்துகிறது. ஐ.சி.ஓ.எம் கோடிட்டுக் காட்டியுள்ளபடி, ஐ.எம்.டி 2024-ன் இலக்குகள்: 1) தரமான கல்வி - உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவித்தல். 2) தொழில், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு - உறுதியான உள்கட்டமைப்பை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் புதுமையை வளர்த்தல்.
இந்த உரைக்கோவை நிகழ்ச்சி பயன்பாட்டு அருங்காட்சியகத்தின், இளம் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
கருத்துகள்