விசாரணைக்கு வந்த நபர்களிடம் நகைகள் வாங்கி தனது பெயரில் வங்கியில் அடமானம் வைத்து பணம் வாங்கிய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம்
விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த 95 பவுன் நகையை 50 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்!
விசாரணைக்கு கொண்டு வந்த 95 பவுன் நகையை வாங்கியில் 50 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த
மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் மதுரை காவல்துறை துணைத் தலைவர். அதன் விபரம் வருமாறு:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 33) பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினையா. இவர்களுக்கு திருமணம் நடந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக புகார் மீது விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெறுகிறது.
ஆய்வாளர் கீதா, ராஜேஷ்-அபினையா இருவரிடமும் நடத்திய விசாரணையில் அபினையாவின் பெற்றோர் திருமணத்திற்காகப் போட்ட 95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பித் தரும் படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல் ஆய்வாளர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். நகையைப் பெற்றுக்கொண்ட காவல் துறை ஆய்வாளர் கீதா வங்கிக்கு எடுத்துச் சென்று ரூபாய்.42 லட்சத்திற்கு அடமானம் வைத்து அந்தப் பணத்தை காவல் ஆய்வாளர் எடுத்துச் சென்று விட்டு புகார் செய்த அபினையாவிடம் இந்தச் செய்தியை சொல்லாமல் மறைத்துள்ளார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்த அபிநயா தன் கணவர் ரஜேஷ் தரப்பினரிடம் நகையைக் கேட்டு போன் செய்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அபிநயாவின் கணவர் ராஜேஷ் 95 பவுன் நகையை காவல் ஆய்வாளரிடம் கொடுத்து விட்டதாக கூறிவிட்டு ராஜேஷ் காவல் ஆய்வாளரிடம் நகையை கேட்க அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.அதனால் சந்தேகமடைந்த அபிநயாவை பிரிந்த கணவர் ராஜேஷ்
மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து 95 பவுன் நகையில் 10 பவுன் நகையை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி நகையை தரவில்லை.
அதன் பின்னர்ராஜேஷ் மதுரை மண்டல காவல்துறை துணைத் தலைவரிடம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்ன் காவல்துறை ஆய்வாளர் கீதாவின் மோசடி குறித்து புகார் கொடுத்து அதன் மீது விசாரணை நடத்திய காவல்துறை துணைத் தலைவர் ரம்யா பாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். விசாரணை என்ற பெயரில் காவல்துறை ஆய்வாளரே நிவாரணம் கேட்டு வந்தவர்களிடம் மோசடி செய்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கருத்துகள்