அழகு மற்றும் ஆரோக்கியத் துறை திறன் கவுன்சிலால் சான்றளிக்கப்பட்ட 270 பேரை மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் சந்தித்தார்
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 மற்றும் திறன் இந்தியாவின் கீழ் பல்வேறு பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களில் சான்றிதழ் பெற்ற 270 பேரை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது அழகு மற்றும் ஆரோக்கிய துறை திறன் கவுன்சில் (பி & டபிள்யூ.எஸ்.எஸ்.சி) ஏற்பாடு செய்த 3-வது பட்டமளிப்பு விழாவாகும். இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த இயக்கத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜெயந்த் சவுத்ரி, அழகு மற்றும் ஆரோக்கியத் துறை உலக அளவில் ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலாக உள்ளது என்றும், இந்தத் துறையில் உலகளாவிய வளர்ச்சியை இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் விஞ்சியுள்ளது என்றும் கூறினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பி & டபிள்யூ.எஸ்.எஸ்.சி குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவோர் மீது வலுவான கவனம் செலுத்தி 106 பணியிடங்களை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். துடிப்பான தொழில்துறையில் தங்களை தலைவர்களாக மாற்றிக்கொண்டு, மகத்தான மீள்திறன் மற்றும் உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பட்டதாரிகளை அவர் பாராட்டினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாடு நகர்ந்து வரும் நிலையில், அதன் திறமையான தொழிலாளர்களின் ஆற்றல் மற்றும் வீரியம் இந்தத் துறையின் வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்
கருத்துகள்