குடியரசுத் தலைவரை நேபாள பிரதமர் சந்தித்தார்
நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹால் 'பிரசண்டா' இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையின் கீழ், நேபாளம் முன்னுரிமை பங்குதாரர் என்று கூறிய குடியரசுத் தலைவர், நமது தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நேபாளத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.குடியரசுத் தலைவரை மாலத்தீவு அதிபர் சந்தித்தார்
மாலத்தீவு குடியரசின் அதிபர் டாக்டர் முகமது முய்ஸு இன்று (ஜூன் 10,2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் டாக்டர் முய்ஸுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், மாலத்தீவின் புதிய அரசுக்கும், மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அதிபர் டாக்டர் முய்ஸு தலைமையின் கீழ் மாலத்தீவு வளம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை குறிப்பிட்ட இரு தலைவர்களும், மக்களுக்கு இடையேயான தொடர்புகள், திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளிட்ட நமது பரந்துபட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர்.
வரும் ஆண்டுகளிலும் இந்தியா-மாலத்தீவு உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.குடியரசுத் தலைவரை மொரீஷியஸ் பிரதமர் சந்தித்தார்
மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்நாத் இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு விருந்தினராக மொரீஷியஸுக்கு தான் மேற்கொண்ட வெற்றிகரமான அரசுமுறைப் பயணத்தையும், மொரீஷியஸ் தலைவர்கள் மற்றும் மக்களுடன் தான் நடத்திய கலந்துரையாடல்களையும் அதிபர் திரௌபதி முர்மு அன்புடன் நினைவு கூர்ந்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி குறித்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மொரீஷியஸ் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டாளி என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.குடியரசுத் தலைவரை செஷல்ஸ் துணை அதிபர் சந்தித்தார்
செஷல்ஸ் குடியரசின் துணை அதிபர் திரு அகமது அஃபிஃப் இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற புதிய அரசின் பதவியேற்பு விழாவில் துணை அதிபர் அஃபிஃப் செஷல்ஸ் நாட்டின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்
செஷல்ஸின் வளர்ச்சி விருப்பங்களுக்கு ஆதரவளிக்கவும், மக்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை குடியரசுத் தலைவர் முர்மு மீண்டும் உறுதிப்படுத்தினார்.
செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவான் மற்றும் செஷல்ஸ் மக்களின் வாழ்த்துக்களை அதிபர் திரௌபதி திரமுவிடம் தெரிவித்த துணை அதிபர் அஃபிப், தமது முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். செஷல்ஸில் இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மை ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு உதவி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
கருத்துகள்