சேலம் மாநகர Serious Crime Squared அதாவது தீவிர குற்றத் தடுப்புப் பிரிவுக் காவல்துறை ஆய்வாளர் கணேசன்.
கடந்த 2016-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றிய போது நிலப் பிரச்னையில் அப்போது பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக சுந்தரமும், கணேசனும் இலஞ்சம் கேட்டதாகக் கூறி புகார் எழுந்தது. மேலும், அது தொடர்பான் காணொலிக் காட்சிகளும் பரவின.
புகாரளிக்க வந்தவரிடம் இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, விசாரணைகள் சட்டப்படி நடைபெற்று வந்தது. அது தொடர்பான விசாரணைக்கு காவல்துறை ஆய்வாளர் கணேசன் ஆஜராகி வந்த நிலையில் மேற்கண்ட விசாரணையில் உண்மைத்தன்மை கண்டறிந்து உறுதி செய்யப்பட்டு, அதற்கான அறிக்கை மாநில உள்துறைச் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் அமுதா, ஆய்வாளர் கணேசனை பணி நீக்கம் செய்யுமாறு கூறி உத்தரவு பிறப்பித்திருந்தன்டிப்படையில் சேலம் மாநகரக் காவல் ஆணையர் விஜயகுமாரி, ஆய்வாளர் கணேசன் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.
2016-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் விசாரணை முடிவில், சேலம் Serious Crime Squared அதாவது தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம், காவல்துறை வட்டாரங்களில் நேர்மையாக நடக்காமல் போன இவர் தண்டனை மற்றவர்களையும் யோசிக்க வைக்கிறது
கருத்துகள்