பிரிக்ஸ் வெர்சாய்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான மதிப்புமிக்க உலகளாவிய தேர்வில் கட்ச் பகுதியின் ஸ்மிருதிவானுக்கு இடம் கிடைத்ததற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா பாராட்டு
பிரிக்ஸ் வெர்சாய்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான மதிப்புமிக்க உலகளாவிய தேர்வில் கட்ச் பகுதியின் ஸ்மிருதிவான் இடம் பெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:
"பிரிக்ஸ் வெர்சாய்ஸ் அருங்காட்சியகங்கள் 2024 க்கான மதிப்புமிக்க உலகளாவிய தேர்வில் கட்ச்சில் உள்ள ஸ்மிருதிவான் இடம் பெற்றிருப்பது நம் அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணம். பிரதமர் திரு நரேந்திர மோடியின் கற்பனையில் உருவான ஸ்மிருதிவான், ஒரு அருங்காட்சியகமாகும். இது 2001-ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் நாம் இழந்த மக்களின் நினைவுகளைப் போற்றுகிறது. பிரிக்ஸ் வெர்சாய்ஸ் அருங்காட்சியகங்கள் 2024 க்கான உலகளாவிய தேர்வில் இது சேர்க்கப்படுவது, அவர்களின் நினைவுகளை உலகம் முழுவதும் பரப்பும்.”
கருத்துகள்