புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலையத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆய்வாளராகப் பனியாற்றியவர்
இராஜேந்திரன் (வயது 55). இவர், தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட்டம் தொட்டியம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் விராலிமலை காவல் நிலையத்தில் ஆய்வாளராக அவர் பணியாற்றிய போது, விராலிமலை அருகிலுள்ள உள்ள பொருவாய் கிராமத்தில், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் அவருக்கும், நிலத்தரகர்களுக்குமிடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, விராலிமலை காவல் நிலையத்தில் 2023, மார்ச் 17-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதில், ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யாமலிருக்க ஆய்வாளர் இராஜேந்திரன் அவரிடமிருந்து ரூபாய்.2 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாகச் சொல்லப்படுகிறநிலையில், அது தொடர்பாக கடந்த 2023, அக்டோபர் 4 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகார் வந்ததனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், இந்த புகார் மனு குறித்துத் தொடங்கிய அவர்களின் விசாரணையின் முடிவில் இராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், நேற்று தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் இராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக ரூபாய். 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள்