பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் குருபரஅள்ளி வருவாய் குரூப் கிராமத்திற்கு உட்பட்டது கொட்டாம் புளியனூர் கிராமம் மணி மகன் சுதாகர். விவசாயிக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிரயம் செய்தது போல் போலியான முறையில் வருவாய்த் துறையினர் பட்டா கொடுத்துள்ளனர்.அது குறித்து வருவாய்க் கோட்டாட்சியரிடம் சுதாகர் மனு அளித்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு குருபரஅள்ளி கிராம நிர்வாக அலுவலரான பே.தாதம்பட்டி கதிரவனுக்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து
சுதாகர் கதிரவனைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் 2000 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் தான் வேலை நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என சுதாகர் கூறியதையடுத்து ஆயிரம் தரும்படி கதிரவன் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுதாகர் அது குறித்து தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் பெருமாள் அறிவுறுத்தலின் பேரில் நேற்று பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய 1000 ரூபாய் நோட்டுகளுடன் சென்ற சுதாகர் தென்கரைக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் சுதாகரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை வாங்கியவர் தனது சட்டைப் பையில் வைத்த போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுதாகரை பிடித்தனர். பின்னர் தென்கரைக்கோட்டை ஆர்.ஐ அலுவலகத்திற்கு கூட்டிச் சென்று நான்கு மணி நேரம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து ந உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்ந்தனர்.
கருத்துகள்