முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆப்கானிஸ்தானியர் படையெடுப்பில் சிதிலமடைந்த குப்தர் கால நாளந்தா பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்பட்டது

பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்

"நாளந்தா இந்தியாவின் கல்வி, பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாகும்""நாளந்தா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், கௌரவம், மதிப்பு, தாரக மந்திரம், பெருமை மற்றும் வரலாறு"

" மறுமலர்ச்சி அடைந்துள்ள இந்தியா ஒரு பொற்காலத்தைத் தொடங்கப் போகிறது"

"நாளந்தா என்பது இந்தியாவின் கடந்த கால மறுமலர்ச்சி மட்டுமல்ல. உலகம் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் அதனுடன் இணைந்துள்ளது"

"இந்தியா பல நூற்றாண்டுகளாக ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து தனித்தன்மையை நிரூபித்துள்ளது. நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்து முன்னேற்றத்தை அடைவோம்"


"உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தியா மீண்டும் உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்"


"இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் விரிவான மற்றும் முழுமையான திறன் அமைப்பை ஏற்படுத்துவதே அரசின் முயற்சியாகும். இந்த நடவடிக்கை உலகிலேயே மிகவும் மேம்பட்ட ஆராய்ச்சி சார்
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.06.2024) தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் தாம் நாளந்தாவுக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் நிலவுவதாக அவர் கூறினார். நாளந்தா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், மரியாதை, அறிவின் வேர், தாரக மந்திரம் என்று அவர் தெரிவித்தார். புத்தகங்கள் நெருப்பில் கருகினாலும் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையை பறைசாற்றுவதே நாளந்தா பல்கலைக்கழகம் என்று பிரதமர் தெரிவித்தார். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி என்று அவர் எடுத்துரைத்தார்.


நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டும் என்று அவர் குறிப்பிட்டார். வலுவான மனித மாண்புகளைக் கொண்ட நாடுகள், வரலாற்றுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சிறந்த உலகை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன என்றும் பிரதமர் கூறினார்.நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டார். இப்பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி இந்திய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்லாமல் அறிவு உலகின் மறுமலர்ச்சி என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். நாளந்தா பல்கலைக்கழக வளாக திட்டத்தில் நட்பு நாடுகளின் பங்களிப்பை பாராட்டிய அவர், இன்றைய தொடக்க விழாவில் பல நாடுகள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். நாளந்தா பல்கலைக்கழக மேம்பாட்டில் பீகார் மக்களின் உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா என்றால் அறிவு மற்றும் கல்வியின் தொடர்ச்சி என்று பொருள்படும் எனக் கூறினார்.  கல்வி குறித்த இந்தியாவின் அணுகுமுறையும், சிந்தனையும் இதுவே என்றும் அவர் தெரிவித்தார். கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதுடன் உயரிய மதிப்புகளையும், சிந்தனைகளையும் அது கற்பிக்கிறது என்று பிரதமர் கூறினார். பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தேசங்களைப் பொருட்படுத்தாமல் அனுமதிக்கப்பட்டனர் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். புதிதாக திறக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் அதே பண்டைய பாரம்பரியத்தை நவீன வடிவில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 'உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.

கல்வியை மனித நலனுக்கான கருவியாகக் கருதும் இந்திய பாரம்பரியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். அடுத்து சில நாட்களில் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் பற்றி குறிப்பிட்ட அவர், யோகா தினம் சர்வதேச பண்டிகையாக மாறியுள்ளது என்றார். யோகாவின் பல அம்சங்கள் வளர்ச்சி அடைந்த போதிலும், இந்தியாவில் யாரும் யோகா மீது ஏகபோக உரிமை எதையும் வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார். அதேபோல், ஆயுர்வேதத்தை இந்தியா உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொண்டது என்று அவர் கூறினார். நிலைத்தன்மைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில், வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் மற்றும் சர்வதேச சூரிய கூட்டணி போன்ற இந்தியாவின் முன்முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். நாளந்தா வளாகம், முன்னோடியான முன்முயற்சிகளான பசுமை எரிசக்தி, பூஜ்ஜிய உமிழ்வு, நீர் சேமிப்பு உள்ளிட்ட நிலையான சூழல் பாதுகாப்பு அம்சங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.


கல்வியின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் வேர்களை ஆழப்படுத்த வழிவகுக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இது வளர்ந்த நாடுகளின் அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் இந்தியா, தனது கல்வி முறையை மாற்றி வருகிறது என்று அவர் கூறினார். "உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே தமது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக இந்தியா மீண்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் கூறினார். ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சேவை வழங்கும் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள், சந்திரயான் மற்றும் ககன்யான் உருவாக்கிய அறிவியல் மீதான ஆர்வம், ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற முன்முயற்சிகள் இந்தியாவில் 1.30 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வழிவகுத்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். சாதனை எண்ணிக்கையிலான காப்புரிமைகள் பெறப்பட்டு ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1 லட்சம் கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்


உலகிலேயே மிகவும் மேம்பட்ட ஆராய்ச்சி சார்ந்த உயர்கல்வி முறையுடன், முழுமையான திறன் மேம்பாட்டு முறையை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். உலக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மேம்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் எட்டப்பட்டுள்ள சாதனைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், க்யூஎஸ் தரவரிசையில் 9  நிறுவனங்களே இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது 46 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதைக் குறிப்பிட்டார். உயர் கல்வி தரவரிசையிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மூன்று நாளிலும் ஒரு அடல் டிங்கரிங் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே போல் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 23 ஐஐடிக்கள் உள்ளன என்றும், ஐஐஎம்களின் எண்ணிக்கை 13 லிருந்து 21 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். எய்ம்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து 22 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 10 ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், புதிய கல்விக் கொள்கை,  இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்றார். இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், போன்ற சர்வதேச பல்கலைக்கழகங்களின் புதிய வளாகங்கள் இந்தியாவில் திறக்கப்படுவது போன்றவற்றையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த அனைத்து முயற்சிகளாலும், இந்திய மாணவர்கள் உள்நாட்டிலேயே சிறந்த உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் நமது நடுத்தர வர்க்கத்தினரின் பணம் சேமிக்கப்படுகிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்கள் உலக அளவில் பல நாடுகளில் தங்களது வளாகங்களை சமீபத்தில் நிறுவியதைக் குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா பல்கலைக்கழமும் இதே பணியைச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய இளைஞர்கள் மீது உலகத்தின் பார்வை பதிந்துள்ளது என்று கூறிய பிரதமர், இந்தியா புத்த பகவானின் நாடு என்றும், ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றும் தெரிவித்தார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் தத்துவம் பல விஷயங்களில் எதிரொலிப்பதாக அவர் கூறினார். ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு என்ற இந்தியாவின் தத்துவம், உலக எதிர்காலத்திற்கான வழியாகக் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற இந்தியாவின் கொள்கை உலகுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார். உலகளாவிய சகோதரத்துவ உணர்வுக்கு நாளந்தா பல்கலைக்கழம் ஒரு புதிய பரிமாணத்தை வழங்க முடியும் எனவும், இதன் மாணவர்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

நாளந்தா மாணவர்கள், இந்தியாவின் எதிர்காலம் என்று கூறிய பிரதமர், அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் இவர்கள்  முக்கிய பங்காற்றுவார்கள் என்றார். நாளந்தாவின் மதிப்புகளை தங்களுடன் முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு அதன் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்காக செயல்படுமாறு மாணவர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

நாளந்தாவின் அறிவு, மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக அமையும் என்றும், வரும் காலங்களில் இதன் இளைஞர்கள் உலகம் முழுமைக்கும் வழிகாட்டுவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாளந்தா உலக நலனுக்கான முக்கிய மையமாக மாறும் என்று தாம் நம்புவதாகக் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, பீகார் துணை முதலமைச்சர்கள் திரு விஜய் குமார் சின்ஹா, திரு சாம்ராட் சௌத்ரி, நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அரவிந்த் பனகாரியா மற்றும் நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு அபய் குமார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி:-நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வி வளாகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1900 இருக்கைகள் உள்ளன. தலா 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்கங்கள், சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய ஒரு மாணவர் விடுதி மற்றும் ஒரு சர்வதேச மையம், 2000 நபர்கள் வரை பங்கேற்கக் கூடிய ஒரு அரங்கம், ஒரு ஆசிரிய மன்றம் மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த வளாகம் ஒரு உமிழ்வற்ற பசுமை வளாகமாகும். சூரிய மின்சக்தி அமைப்பு, கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு, 100 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை அமைப்புகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்மைகளுடன் இந்த வளாகம் தனிச்சிறப்புடன் உள்ளது.

இப்பல்கலைக்கழகம் ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், மாணவர்கள் தங்கிப் படிக்கும் உலகின் முதல் பல்கலைக்கழகமாக இருந்தது எனக் கருதப்படுகிறது. நாளந்தாவின் பழங்கால சிதைவு எச்சங்கள், 2016-ம் ஆண்டில் ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.             நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் பீகார் மாநில மையப்பகுதியிலுள்ள ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் பொது ஆண்டு 415–455 ல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகமாகும். பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்து வளர்ச்சி ஏற்பட்டது . நாளந்தா பல்கலைக்கழக நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இது மகாயான புத்த சமயக் கருத்துக்களை அக்காலத்தில் கற்பிக்கும் சிறந்த இடமாக விளங்கியது. பொது ஆண்டு 1197 ல் டில்லி சுல்தானின் படைத்தலைவர் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைவீரர்களால் நாளந்தா பல்கலைக்கழகம் முற்றாக அழிக்கப்பட்டது.   முகம்மது பின் பக்தியார் கில்ஜி ஆப்கானித்தானில் பிறந்த துருக்கி இனத்தவராவார் 1193 ஆம் ஆண்டில், நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் விக்கிரமசீலாவின் கல்விக் கூடங்களை தீயிட்டு எரித்தார்.

1203 ஆம் ஆண்டில் தற்போது பிகாராக உள்ள அக்காலப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர், பிரிக்கப்படாத வங்காள தேசத்தை ஆண்ட சென் பேரரசர் இலக்குமன சென் மீது படையெடுத்து, அதன் தலைநகரான நவதீபத்தை கைப்பற்றினார். பின் தற்கால மேற்கு வங்காளத்தின் தேவகோட், கௌர் போன்ற நகரங்களைக் கைப்பற்றினார். திபெத்திய போர் வீரர்களுடன் தோற்ற முகமது பின் பக்தியார் கில்ஜி, நூறு படை வீரர்களுடன் மட்டும் வங்காளத்தின் தேவகோட் நகரத்திற்கு திரும்பினார். பக்தியார் கில்ஜி, தேவகோட் நகரத்தில் தங்கியிருந்த போது, அலி மர்தன் எனும் வங்காள தேசப் படைத்தளபதியால் கொலை செய்யப்பட்டார். இந்தியர்கள் கலை, அறிவியல் மற்றும் இலக்கியத் துறையில் பல சாதனைகள் செய்தது  காரணமாக பண்டைய இந்தியாவில் குப்தர்களின் காலம் இந்தியாவின் பொற்காலமென்று அழைக்கப்படுகிறது. குப்தப் பேரரசு பொது ஆண்டு 320  முதல் பொது ஆண்டு 550 ஆம் ஆண்டு உள்ள காலம் வரை நீடித்தது. இரண்டாம் சந்திரகுப்தருக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் முதலாம் குமாரகுப்தன் பதவிக்கு வந்தார். இவரது தாய் மகாதேவி துருவசுவமினியாவார். முதலாம் குமாரகுப்தன் மகேந்திராதித்தன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார். இவர் பொது ஆண்டு 455 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தின் முடிவில் நருமதைப் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு பழங்குடியினமான புஷ்யமித்திரர்கள் இவரது பேரரசுக்கு அச்சுறுத்தலாக உருவாகினர். முதலாம் குமாரகுப்தனின் ஆட்சியின் முடிவின் போது குப்த பேரரசுக்கு கிடாரிகளும் கூட அநேகமாக அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதலாம் குமாரகுப்தனின் மகன் ஸ்கந்தகுப்தர் தன்னுடைய பிதாரி தூண் கல்வெட்டில், ஒழுங்கற்று இருந்த நாட்டை மீண்டும் கட்டமைப்பதில் தனது முயற்சிகளை பற்றியும், புஷ்யமித்திரர்கள் மற்றும் ஊணர்களுக்கு எதிராக படை பலம் பெற்று மீண்டும் ஒருங்கிணைத்து வெற்றிகளைப் பெற்றதையும் குறிப்பிடுகிறார்.

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் இவர் தான். 15 ஜூலை 2016 ஆம் தேதியன்று யுனெஸ்கோவால் உலகத் தொல்லியல் பாரம்பரியக் களமாக  அறிவிக்கப்பட்டது.மேலும், முதலாம் குமாரகுப்தன் கார்த்திகேயனின் பக்தனாவான்.

பீகாரில் நாளந்தாவின் இடிபாடுகளை பிரதமர் பார்வையிட்டார்

பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் முதல் குடியிருப்பு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாளந்தாவின் இடிபாடுகள் 2016-ம் ஆண்டில் ஐ.நா பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"நாளந்தாவின் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட எச்சங்களைப் பார்வையிட்டது அற்புதமாக இருந்தது. பண்டைய உலகின் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக திகழ்ந்ததற்கு சான்றாக இது  உள்ளது. இந்தத் தளம் ஒரு காலத்தில் இங்கு செழித்து வளர்ந்த அறிவார்ந்த கடந்த காலத்தைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறது. நாளந்தா ஒரு அறிவார்ந்த உணர்வை உருவாக்கியுள்ளது. அது நம் நாட்டில் தொடர்ந்து செழித்து வளர்கிறது.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்