மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் தலைமையில் மருந்துகள் துறையின் ஆய்வுக் கூட்டம்
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் மருந்துகள் துறையின் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். மருந்தியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத் துறை குறித்த விரிவான கண்ணோட்டத்தை துறை அளித்ததுடன், ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கத்தை முன்வைத்தது
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047 மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார், மேலும் ஐந்தாண்டு செயல்திட்டம் மற்றும் 100 நாள் செயல் திட்டத்தையும் மதிப்பாய்வு செய்தார். ஐந்தாண்டுத் திட்டம் மருந்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல், மருத்துவ சாதனங்களில் தற்சார்பு, மக்கள் மருந்தகத் திட்டத்தை விரிவுபடுத்துதல், குடிமக்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை மலிவான விலையில் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தி ஆலைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.
கருத்துகள்