19 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப துறைகளில் 21 கோடி ரூபாய் மதிப்பில்லான
19 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
இந்த இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, சந்தை மேம்பாடு, ஏற்றுமதி மேம்பாடு மற்றும் கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றையும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார். தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த ஆவணங்களை அறிமுகப்படுத்துதல், ஆய்வக உள்கட்டமைப்பு கொள்முதல் மற்றும் பல்வேறு பயன்பாட்டு பகுதிகளில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்காக 16 பொது மற்றும் 11 தனியார் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 27 விண்ணப்பங்களை மத்திய அமைச்சர் பரிசீலித்தார்.
கருத்துகள்