முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்

தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா இ ஆ ப உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்.


10 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் உள்துறைச் செயலாளர் அமுதா இ ஆ ப உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்  செய்யப்பட்டனர்,  

தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் இ ஆ ப  நியமனம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 19 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாற்றத்தில்                                      சிட்கோ மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி  இஆப - பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் ஆகவும்,                       


                 பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜே. ராதாகிருஷ்ணன் இஆப - கூட்டுறவுத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,      கூட்டுறவுத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கோபால்  - கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,        உணவு வழங்கல்துறையின்  முதன்மைச் செயலாளராக இருந்த ஹர் சகாய் மீனா  - சிறப்பு திட்டத்துறை முதன்மைச் செயலாளர் ஆகவும்,                 

                தொழில்நுட்ப கல்வி ஆணையர் -     வீர ராகவ ராவ் தொழிலாளர் நலத்துறை செயலாளர்  ஆகவும்,        தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த் - தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமைச் செயலாளர் ஆகவும்,       

                                      தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான  தீரஜ் குமார்  - உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,    உள்துறை முதன்மைச் செயலாளரான அமுதா  - வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆகவும்,    வருவாய்த்துறை செயலாளரான ராஜாராமன் - தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறை செயலாளர் ஆகவும்,                                 

      தமிழ்நாடு காதி மற்றும் ஊரக தொழில்வாரிய CEO வான  சுரேஷ்குமார்  - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும்,       திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியரான ரிஷப்  - நிதித்துறையில் துணைச் செயலாளராகவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த-விஷ்ணு சந்திரன் - பொதுத்துறை துணை செயலாளராகவும்,          இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த வளர்மதி - சமூகநலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல்துறை இணைச் செயலாளராகவும்,                    அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்னி மேரி ஸ்வர்னா - உள்துறை இணைச் செயலாளராகவும்,            கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியரான ஸ்வரன் குமார் ஜடாவத்  - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளராகவும்,     

                  பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த-குமரகுருபரன் - பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகவும்,                           ஈரோடு மாவட்டக் கூடுதல் ஆட்சியராக இருந்த நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் - ஈரோடு மாநகராட்சியின் ஆணையராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக இருந்த விஜயாராணி  - பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர்  (கல்வி) ஆகவும், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர்  - தாம்பரம் மாநகராட்சியின் ஆணையராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் இயக்குநராக இருந்த சந்திரகலா- இராணிப்பேட்டை மாவட்டஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும்,        வணிகவரித்துறை இணை ஆணையர் ஈரோட்டில் இருந்து வந்த லட்சுமி பாவ்னா தந்நீரு  - நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும்,        தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி ஆணைய செயல் இயக்குநரான பிரியங்கா- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும், சிப்காட் செயல் இயக்குநரான ஆகாஷ்  - நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும்,         வணிகவரித்துறை இணை ஆணையராக சென்னையில் பணியாற்றிய இரத்தினசாமி - அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், நிதித்துறை துணைச் செயலாளரான சிபி ஆதித்ய செந்தில்குமார் - கடலூர் மாவட்ட ஆட்சியராகவும்,           தாம்பரம் மாநகராட்சி ஆணையரான அழகுமீனா - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும்,                தொழிற்துறை கூடுதல் ஆணையரான கிரேஸ் லால்ரின்திகி பச்சாவு - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும்,                          நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையரான சிம்ரன்ஜித் சிங் கலோன் - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்                நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த மு. அருணா இ.ஆ.ப., 2016 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவராவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கருத்துகள்