மாபெரும் சீரமைப்பு முன்முயற்சியால் திருநீர்மலை சித்தேரி ஏரி புதுப்பொலிவு பெற்றுள்ளது
மாபெரும் சீரமைப்பு முன்முயற்சியால் திருநீர்மலை சித்தேரி ஏரி புதுப்பொலிவு பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
புனரமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு எஸ் அருண்ராஜ், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (மெப்ஸ்) மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
தாம்பரத்தில் உள்ள மெப்ஸ், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இஎஃப்ஐ) ஆகியவை இணைந்து இந்தப் புனரமைப்புப் பணியை மேற்கொண்டன. ஏரியின் நீர்ப்பிடிப்பு பரப்பை அதிகரிப்பதும், உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு உதவி செய்வதும் இந்தப்பணியின் நோக்கமாகும். இதற்காக ஏரியை தூர்வாறுதல், கரைகளை உயர்த்துதல், உள்ளூர் பறவைகளுக்கு உதவ தங்குமிடங்களை அமைத்தல், நிலத்தடி நீர் அதிகரிப்புக்காக கசிவு நீர் பகுதிகளை அமைத்தல், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்க மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இஎஃப்ஐ மூலம் ரூ. 50 லட்சம் முதலீட்டுடன் இந்தப் புனரமைப்புப் பணிகளை 85 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி வெற்றிகரமாக நிறைவடையும்போது, இந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் மீட்பில் மிகப்பெரும் சாதனையாக அமையும். மேலும் இந்தப் பகுதி மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் மிக முக்கியமான ஆதார வளமாக திருநீர்மலை சித்தேரி ஏரி விளங்கும்.
கருத்துகள்