அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் அவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்பட்டது. அவரது செய்திக் குறிப்பு:- எனது சக ஜனநாயகக் கட்சியினரே, எனது நியமனத்தை ஏற்க வேண்டாம் என்றும்,
எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் ஜனாதிபதியாக எனது கடமைகளில் எனது முழு ஆற்றலையும் செலுத்தவும் முடிவு செய்துள்ளேன். 2020 ஆம் ஆண்டில் கட்சி வேட்பாளராக எனது முதல் முடிவு கமலா ஹாரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுப்பதுதான். மேலும் இது நான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டு எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் இன்று வழங்க விரும்புகிறேன். ஜனநாயகவாதிகள் - ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்.
- ஜோ பிடன். எனக் குறிப்பிட்டுள்ளார்
81 வயதான அதிபர் ஜோ.பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடையச் செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டுமெனவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில், தற்போது தேர்தலிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்.. தான் அதிபர் வேட்பாளராக கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட பிறகு கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது சிறந்த முடிவு என குறிப்பிட்டுள்ளார். மேலும் இம்முறையும் தான் கமலா ஹாரிசை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள ஜோ.பைடன் ஒன்றாக இணைந்து ட்ரம்பை வீழ்த்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்