ஊரக மேம்பாட்டு அமைச்சகமும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகமும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகமும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகமும் இணைந்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த அணுகுமுறையின் அடிப்படையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் முன்னோடித் திட்டங்கள் மூலம் மகளிர் தலைமையிலான கிராமப்புறத் தொழில்களை முறைப்படுத்தி வலுப்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு ஸ்வாதி ஷர்மா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு மெர்சி எப்பாவோ, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.சி.எல்.தாஸ், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் மற்றும் இரு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் பேசிய திருமிகு ஸ்வாதி ஷர்மா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இடையே இந்த உடன்பாடு கையெழுத்தானது, ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி லட்சாதிபதி சகோதரிகளுக்கு அதிகாரம் அளிக்க இந்த ஒத்துழைப்பு வழிவகுக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
சுய உதவிக் குழுவின் சகோதரிகளை தொழில்முனைவில் ஆதரிப்பது மற்றும் உயர்த்துவது, இரு அமைச்சகங்களுக்கிடையேயான கூட்டாண்மையின் நோக்கம் என்று திருமிகு மெர்சி எப்பாவோ தெரிவித்தார்.
கருத்துகள்