பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பை' ஊக்குவிப்பதில் டி.டி.எஃப் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் (டிடிஎஃப்), பொது / தனியார் தொழில்கள், குறிப்பாக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பில் 'தற்சார்பை' ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. டி.டி.எஃப் திட்டம் என்பது 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டி.ஆர்.டி.ஓ) செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை திட்டமாகும்.
இதுவரை, ரூ.300 கோடிக்கு மேல் உறுதியளிக்கப்பட்ட மொத்தம் 77 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புதிய தொழில்கள் உள்ளிட்ட இந்திய தொழில்களுக்கும், கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு மற்றும் இரட்டைப் பயன்பாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக மானியம் வழங்கப்படுகிறது.
தனியார் தொழில்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கலாச்சாரத்தைக் கொண்டு வர மானிய உதவி வழங்கப்படுகிறது.
நாட்டில் முதன்முறையாக உருவாக்கப்படும் முக்கிய தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
ஆயுதப்படைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தகுதி / சான்றளிக்கும் முகமைகள் இடையே தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருத்துகள்