மேற்கு வங்காளம் கொல்கத்தா மருத்துவர் பலாத்காரக் கொலை செய்யப்பட்ட வழக்கு:
ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் நாசவேலையில் ஈடுபட்டதாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பேரணி நடந்தது. குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பேரணியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கு
தொடர்பாக 33 வயதாகும் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தாவில் காவல்துறையினரிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்
பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சனை ஒருபுறமெனில், சுதந்திரதினத்தன்று அதிகாலையில் போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்மக் கும்பல் பயங்கரமாகத் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த மருத்துவ சாதனங்களைச் சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் மீதும் கல் வீசித் தாக்கினார்கள்.
அதில் 15 காவலர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து மேற்கு வங்காள மாநிலத்தில் மருத்துவர்கள் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்புத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக் கொலை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடியில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி மக்களின் கோபத்தை தணிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜியே இன்று கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,
“கொல்கத்தா சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். ஆனால் அதற்கு பதில் சிலர் மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். கம்யூனிச இடதுசாரிகளும், பாரதிய ஜனதா கட்சியும் மேற்கு வங்கத்தில் வங்கதேச பாணியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார் மேலும்
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து மருத்துவர்கள் நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக் .
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சிபிஎம் கட்சியும், பாஜகவும் தான் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியும். நள்ளிரவு 12-1 மணிக்குள் அவர்கள் அங்கு சென்ற வீடியோக்கள் உள்ளன. பாஜகவினர் தேசிய கொடியுடன் அங்கு சென்றுள்ளார்கள். அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள தொடர்பை நிச்சயம் அம்பலப்படுத்த வேண்டும்” என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சம்பவம் மேற்கு வங்க அமைச்சர் சோபந்தேப் சட்டோபாத்யாய் கூறுகையில், "...எனக்கு வீட்டில் ஒரு மகள் இருக்கிறாள். இதை என் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. இதை செய்தது யார்?... ஒரே ஒரு நபர் மட்டும் இதைச் செய்யவில்லை என்பது என் நம்பிக்கை. இறந்தவருக்கு விரல் உடைந்து, மூக்கு உடைந்து ரத்தம், காலர் எலும்பு உடைந்து விட்டது - இதையெல்லாம் ஒருவரால் செய்ய முடியாது..."
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சம்பவம் அரசு அலுவலர்கள் துல்லியமாகச் செயல்பட வேண்டும் என்றும், 48 மணிநேரத்தில் தவறினால், ஐஎம்ஏ நாடு தழுவிய நடவடிக்கையைத் தொடங்குவதற்குக் தயார்படுத்தப்படும் என்றும் நாங்கள் கோருகிறோம். ஒரு நியாயமான, வெளிப்படையான மற்றும் நேரத்தை உணர்திறன் கொண்ட குற்றவியல் விசாரணை ஒழுங்காக உள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும், இல்லையெனில் ஐஎம்ஏ நாடு தழுவிய போராட்டங்களை நடத்தும் எனத் தெரிவித்தார், இந்திய மருத்துவர்கள் சங்கம் ராஞ்சி, ஜார்கண்ட்: ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சம்பவம் குறித்து ஜேஎம்எம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மாஜி கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, எந்த மாநில அரசும் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம்..."தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கொல்கத்தாவின் அரசு நடத்தும் RG கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் ஒரு இளநிலை பெண் மருத்துவர் இறந்து கிடந்ததாக ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி அன்று ஊடக அறிக்கையை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது மேலும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலைநிறுத்தம், தர்ணா அல்லது ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தக்கூடாது என எச்சரிக்கும் அனைத்துக் குடியுரிமை மருத்துவர்களுக்கும் நேற்று அலுவலக குறிப்பாணை அனுப்பப்பட்டது.கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்குகிறது. அதேசமயம், பல்வேறு கோரிக்கைகளுடன் மருத்துவர்களின் போராட்டமும் நீடிக்கிறது.கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்குகிறது. அதேசமயம், பல்வேறு கோரிக்கைகளுடன் மருத்துவர்களின் போராட்டமும் நீடிக்கிறது.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்தற்போது அவர் காவல்துறை காவலில் உள்ள சூழலில், அழுத்தம் காரணமாக மருத்துவ மாணவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, டெல்லியில் இருந்து சிபிஐ குழு ஒன்று கொல்கத்தா விரைந்தது. சிபிஐ குழு தனது விசாரணையை தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், பணியில் இருந்த சக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், கைதான சஞ்சய் ராய் உள்ளிட்டோரிடம் சிபிஐ குழு விசாரணை நடத்துகிறது.இதனிடையே, மருத்துவ மாணவி கொலைக்கு நீதிக் கேட்டு மருத்துவச் சங்கங்களின் போராட்டம் ஏழாவது நாளை எட்டியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஃபோர்டா மருத்துவச் சங்கத்தினர் தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதாக கூறி போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அதேசமயம், தேசிய மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு தனது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் 2 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்