பிரிட்டன் பற்றி எரிகிறது 1.8 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை என்ன?
பிரிட்டன் நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து அங்கு வன்முறை நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுந்துள்ளது, இப்போது பிரிட்டன் நாட்டிலும் வன்முறை பரவி வருகிறது.
அங்கு லண்டனுக்கு வெளியே பல இடங்களில் மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது, இவை அனைத்திற்கும் காரணம் போலியான செய்தி தான். அதாவது ஜூலை மாதம் 29 ஆம் தேதி வடக்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கத்திகுறித்து தாக்குதல் நடந்ததில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். மேலும் எட்டு குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தஅனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்திய 17 வயதான ஆக்சல் ருடகுபனா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த ஆக்செல் ருடகுபனா பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள கார்டிஃப் நகரில் பிறந்து வளர்ந்தார். இருப்பினும், அவர் வெளிநாட்டிலிருந்து குடியேறிய முஸ்லீம் என்று சமூக வலைத்தளங்களில் தறான தகவல்கள் வேகமாகவே பரவியதனால் அடுத்த நாளே சவுத்போர்ட்டில் மோசான வன்முறை ஏற்பட்டது. உள்ளூர் மசூதியைத் தாக்கும் முயற்சியும் நடத்தப்பட்டது.
அப்போது ஆரம்பித்த வன்முறை மளமளவென நாடு முழுக்கப் பரவியது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக 111 பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளனர். இருப்பினும், சுண்டர்லேண்ட், மான்செஸ்டர், பிளைமவுத் மற்றும் பெல்ஃபாஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரங்கள் வெடித்ததில் போராட்டத்தில் ஈடுபடுவோர் புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து அவர்களின் கடைகளைச் சேதப்படுத்தி வருகிறார்கள். மேலும், காவல் துறை மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்.
தீவிர வலதுசாரி இயக்கங்களே இந்த வன்முறைக்குப் பின்னால் இருப்பதாகப் பிரிட்டனில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் அரசு குற்றஞ்சாட்டுகிறது. அவர்கள் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், சமூக வலைத்தள நிறுவனங்களும் கூட தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்களின் பிரிட்டனில் இப்போது சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இந்திய மாணவர்கள் செல்லும் முதல் 5 வெளிநாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது . இதற்கிடையே இங்கிலாந்திற்குச் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்தியாவும் ஆலோசனை வழங்கியது. பல பிரிட்டிஷ் நகரங்களில் வன்முறை அதிகமாக இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியக் கலவரமும், வன்முறையும் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில், புலம் பெயர்தலுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுத்து வந்தவரான முன்னாள் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தன் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் அமெரிக்காவிலுள்ள Beverly Hills ல் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகின.
கருத்துகள்