இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் வன்முறை: பதற்றத்தைக் குறைக்க இணையதள சேவைகள் முடக்கம்
இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து மக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இணையதள சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
உதய்பூரில் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் இருவருக்கு நடந்த சண்டையில் கத்தியால் குத்திக்கொண்டு பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களும் இரு வேறு ஜாதிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஜாதி சமூக பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால்
நான்கு கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல வாகனங்கள் கல் வீசித் தாக்கப்பட்டனர். பதற்றம் காரணமாக உதய்ப்பூரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஒரு வர்த்தக நிறுவனம் மீது கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து அதிலிருந்த பல கடைகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க இணையதளம் சேவை முடக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அருகில் ஏராளமானோர் கூடினர் அதை காவல்துறை கலைத்தனர்.
உதய்பூரில் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவரில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி உள்ளானர். அதில் தாக்கப்பட்ட ஆதிதிராவிடர் பட்டியலின மாணவனுக்கு ஆதரவாக பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டதை அடுத்து அது வன்முறையாக மாறியது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உதய்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் போஸ்வால், செய்தியாளர்களிடம் பேசியபோது “காலையில் இரண்டு சிறுவர்களுக்கு இடையே சண்டை நடந்ததாக புகார் வந்தது. இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சிறுவர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு சிறுவனின் தொடையில், மற்றொரு சிறுவன் கத்தியால் தாக்கியுள்ளான். காயம் ஆழமாக இருந்தது. சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவனைச் சந்தித்தேன். அவனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கத்தியால் தாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஆயுதம் பள்ளியில் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்