திருச்செந்துார் கோவிலைச் சுற்றி 1 கி.மீ., சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலைச் சுற்றி 1 கி.மீ., சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது.
இது கடற்கரை மேலாண்மைத் திட்டம் மற்றும் ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறி கோவிலைச் சுற்றிலும் விதி மீறி உயரமான ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் உள்ளன. அப்படி ஆக்கிரமி்தது கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அவற்றை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்துார் செந்தில் ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
திருச்செந்தூரில் அங்கீகாரமற்ற கட்டிடங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கீகாரமற்ற கட்டுமானங்களை விரைவில் அகற்ற தேவையான நடவடிக்கையை திருச்செந்துார் நகராட்சி ஆணையர் நான்கு மாத காலங்களுக்குள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டனர்.
கருத்துகள்