குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவில் யானைக் கொட்டகையில் பெரும் தீ விபத்து யானைக்கு தீவிர சிகிச்சை
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவில் யானைக் கொட்டகையில் பெரும் தீ விபத்து
காரணமாக நெருப்பில் சிக்கிய யானை தீக்காய வலி தாங்காமல் பிளிரியது காயங்களுடன் சங்கிலியை உடைத்து உயிர் தப்பியது. அதிக காயம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் யானை சுப்புலட்சுமி. 1971ஆம் ஆண்டு கோவிலுக்கு ஆத்தங்குடி காடப்ப செட்டியார் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. யானை சுப்புலட்சுமி பக்தர்களிடமும் பணியாளர்களிடமும் மிகுந்த பாசத்துடன் பழகும் குணம் கொண்டது. கோவில் அருகில் யானைக் கொட்டகை அமைந்துள்ளது.
யானைக்கு வெப்பம் தாக்காமல் இருக்க தகரக் கொட்டகையின் கீழ்ப்பகுதியில் ஓலை வேயப்பட்டிருந்ததநிலையில் நேற்று புதன்கிழமை செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நள்ளிரவில் யானை கொட்டகை திடீரென்று தீப்பற்றியது.
மளமளவென பரவிய தீ கலையின் மீது பற்றியதில் யானையின் மீது ஓலைக் கொட்டகை விழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் யானை வலி தாங்க முடியாமல் சங்கிலியை உடைத்துக் கொண்டு கொட்டகையிலிருந்து வெளியேறி முகப்பு பக்கம் வந்தது. இதைக் கண்ட காவலாளி கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவே கூட்டம் கூடியது. இதில் யானையின் முகம், வயிறு மற்றும் வால் பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக வனத்துறையினரும் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்களுடன் மருந்துகளும் வரவழைக்கப்பட்டு யானைக்கு முதலுதவி சிகிச்சை நடைபெற்று வருகிறது. குன்றக்குடி காவல் நிலையத்தில் தீப்பற்றியது குறித்து விசாரித்து வருகின்றனர்
கருத்துகள்