ஆலயத்தில் பிரசாதம் விற்பனை செய்யும் செயல் மதசார்பற்றதென தெரிவித்த நபர் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனு
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்த போது மனுதாரர் தரப்பில், ''கோவில் பிரசாதக் கடையின் பொது ஏலம் அறிவிப்பில் ஹிந்து வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. 108 வைஷ்ணவ ஸ்தலங்களில் தமிழ்நாடு சார்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வரும் திருக்கோவில்களில் பத்தாண்டுகள் பிரசாதக் கடை நடத்திய முன் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்துள்ள
மனுதாரர் பிராமணர் சமூகத்தைச் சார்ந்தவர். வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சாராதவர் என்பதால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. எனவே டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பிரசாதக் கடை நடத்துவது, ஹிந்து மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல . அது சைவம், வைணவம் உள்ளிட்ட எட்டு பிரிவுகள் சார்ந்ததே எனவும் (மதச்சார்பற்ற தன்மை கொண்டது). பிரசாதம் மடப் பள்ளியில் தயாரிக்கப்பட்டு, கடவுளுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது விற்பனைக்கானதல்ல.
ஆனால், கோவில் பிரசாதக் கடைகளில் வைக்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் கடவுளுக்குப் நெய்வேத்தியம் செய்து படைக்கப்படுவதில்லை. எனவே, இது மத நடைமுறையின் வரம்பிற்குள் வரவில்லை. (அதாவது இஸ்லாமிய, கிருஸ்தவ,பார்சியம் தவிர) மற்றவை ஆனால், வணிக நோக்கில் கோவிலில் கடை நடத்துவதற்கான ஏலம் அறிவிப்புகளுக்கான விதிகளை நீக்க வேண்டும்'' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. பிரசாதக் கடைகளை, வணிக நோக்கிலான தனியாருக்கு குத்தகைக்கு விடும் அரசு கோவில் நிர்வாகம் பிரசாதத்தின் தரத்தினை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதும் தெரியவில்லை. கோவில்களில் வணிக நடவடிக்கைகளுக்கான இடமல்ல என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
மதுரை அருள்மிகு கள்ளழகர் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரசாதம் கோவில் நிர்வாகத்தினரால் தான் சுயம்பாகம் மரியாதையுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கோவில் நிர்வாகமே மடப்பள்ளியில் பிரசாதத்தைத் தயாரித்து வழங்குவதால் கோவிலின் வருமானமும் அதிகரிக்கிறது. -விளம்பரம் - -விளம்பரம்-
இந்தியா பலவிதமான கோவில்களால் இயற்கை அழகுடன் காணப்படுகிறது. இந்த ஹிந்துக்கள் வழிபடும் கோவில்கள் நம் நாட்டை மத ரீதியாக வளமாக்குவது மட்டுமல்லாமல், வரலாற்றுப் பெருமையையும் பறைசாற்றுகிறது. கோவில்கள் கட்டிடக்கலை அதிசயங்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கின்றன. கோவில்கள் மத வழிபாடு மற்றும் சமூகத் தொடர்புகளின் மையங்களாகும். இவை வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பதோடு பக்தர்களுக்கு நிறைவையும் தருகின்றன.
எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் பிரசாதங்களை கோயில் நிர்வாகமே இனிமேல் தயாரித்து வழங்க முன் வர வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேறு விதமான வழிபாட்டு நடைமுறைகள், மற்றும் ஆகம விதிகளும் உள்ளன. மேலும் மனுதாரர் தனது விற்பனைக் உண்டான வரி செலுத்தும் GST பதிவை புதுப்பிக்கவில்லை. அதன் காரணமாகவே, அவர் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனவே உண்மையை மறைத்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார். பிரசாதம் வழங்குவதை வணிக நோக்கிலான நடவடிக்கையாகக் கருத இயலாது எனக் கூறும் அறநிலையத் துறை, தனியாரை ஏன் பிரசாதம் விற்பனை செய்வதற்க்கு அனுமதிக்கிறது என்பது தான் தெரியவில்லை. ஹிந்து சமய அறநிலையத் துறையே தரமான முறையில் பிரசாதங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் லட்டும், பழநியில் பஞ்சாமிர்தமும், அழகர் கோவிலில் தோசையும், திருச்செந்தூர் தயிர் சாதமும் போல ஸ்ரீ ரங்கத்துதில் அக்காரவடிசல் தயாரிப்பு செய்து வழங்கினால் அது தனித்துவமான சிறப்பைப் பெறும்.சரியான நேரத்தில் திருச்செந்தூர் ஆலயத்தில் பிரசாதம் படைக்க முடியாத சுயம் பாகம் கவிராயரின் கலிப்பாவில் கண்டுள்ள சொல்லாட்சி மூலம் வெற்றிமாலை என்ற நபர் பாடல் சமைத்த வரலாறு உண்டு
"தூங்க லோசையுஞ் செப்பலி னோசையுந் துள்ளல்
தாங்கு நீர்மையி னோசையுங் கனியுந்தன் பூவும்
ஒங்கு காயுந்தே மாவுங்கூ விளமுமொன் றலிற்சீர்
தேங்கு செந்தமிழ் போன்றது சந்தனச் சிலம்பு'' ஆகவே தமிழ் கடவுள் முருகன் சாந்தமானதாக ஒரு வரலாறு நம்மை வியக்க வைக்கிறது! பிரபலமான கோவில்களில் ஆகம மற்றும் நியம விதிகளின் படி மடப்பள்ளிகளில் விசேஷ முறையில் என்னென்ன பிரசாதங்கள் மற்றும் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்
ஆழ்வார் திருநகரி (வங்கார தோசை) - இது இஞ்சி, மிளகு மற்றும் ஜீராவுடன் தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் வெல்லம் சிரப் கொண்டு பூசப்பட்ட ஒரு காரமான தோசையாகும்.
அடுத்து வள்ளிமலை முருகனுக்கு (தேனும், தினை மாவும்) - வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால், அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யம் செய்து அதுவே பிரசாதமாக வழங்கப்படும்.
அடுத்ததாக கொல்கத்தா காளிதேவிக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவே பக்தர்களுக்கும் பிரசாதமாகிறது.
அடுத்ததாக குருவாயூரப்பன் கோவிலில் பாலடை பிரதமன் பிரசாதமாகிறது.
அடுத்ததாக இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ‘நாத்வாரா’ திருத்தலத்தில் பகவான் கண்ணனுக்கு கோதுமைப் பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
அடுத்ததாக கடலூர் மாவட்டம், சிங்கிரி குடியிலுள்ள லக்ஷ்மிநரசிம்மர் ஆலயத்தில் பானகம் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாகிறது.
அடுத்ததாக திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோவிலில் பால் பாயசம் பிரசாதமாகிறது.
அடுத்ததாக திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மாலாடு நைவேத்தியம் பிறகு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அடுத்ததாக பிள்ளையார்பட்டியில் தேசி விநாயகருக்கு மோதகம் நைவேத்தியம் செய்த, பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அடுத்ததாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று புட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.
அடுத்ததாக கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படியே பல உண்டு இது தெரியாமல் மத ரீதியான ஆலயத்தில் மதசார்பற்றது என மனுதாக்கல் செய்யும் மூடர்கள் தாக்கல் செய்யும் மனு விசித்திரமான செயலாகும்.
கருத்துகள்