டெல்லி தேசிய விமான நிலையத்தில் ரூபாய்.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கண்டறிந்த மோப்ப நாய்
டெல்லி விமான நிலையத்தில் ரூபாய்.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய் உதவியுள்ளது.
உடைமைகளை சுங்க இலாகா அலுவலர்கள் ஊடுருவி ‘ஸ்கேன்’ செய்து பார்த்த போது அதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரியவந்தது.
ஒரு பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் போதைப் பொருள்களைத் தடுக்க பணிகளில் அரசு தீவிரமாக கவனம் செலுத்துகிறது. விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரமாகியுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து பாரீஸ் நகருக்கு டெல்லி வழியாகப் பயணம் செய்த ஒரு பெண் பயணி, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது உடைமைகளை சுங்க இலாகா அலுவலர்கள் ஊடுருவி'ஸ்கேன்' செய்து பார்த்ததில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து மோப்பநாயை வரவழைக்கப்பட்டு அதை மோப்பம் பிடித்து, அது போதைப்பொருள் எனக்காட்டியது.
உடைமைகளை திறந்து ஆய்வு செய்ததில், 'ஹைட்ரோபோபிக்' என்கிற உயர்ரக போதைப்பொருள் இருந்தது. மொத்தம் சுமார் 15 கிலோ போதைப்பொருளை சுங்க அலுவலர்கள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூபாய்.15 கோடிக்கு மேலிருக்கும். ஒரு பெண் பயணி அது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்