கந்தசஷ்டி விழா திருச்செந்தூர் ஆலயத்தில் சுவாமி தரிசனக் கட்டணம் குறித்து
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் காட்டமான கேள்வி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்து மதுரையில் வசிக்கும் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, பி.ராம்குமார் ஆதித்தன் தனது
வழக்கறிஞர்கள். எஸ்.சங்கர், மற்றும் எஸ்.கிருஷ்ணன், டி.பாக்யராஜ் ஆகியோர் மூலம் எதிர் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் ஆலயத்தின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர், திருச்செந்தூர் நகர் காவல் ஆய்வாளர். ஆகியோர் மீது WMP(MD)/21608/2024 மற்றும் WMP(MD)/21610/2024 மற்றும் WMP(MD)/21609/2024 WP(MD) /2024 எனும் வழக்கை தாக்கல் செய்தார். "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கந்தர் சஷ்டி விழா நடக்கிறது. விழாவின்போது தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு குறைவில்லாமல் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வருகிறார்கள்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விழா இல்லாமல் மற்ற நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூபாய்.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் விரைவு தரிசனக் கட்டணம் இரட்டிப்பாக, ரூபாய்.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின் போது விரைவு தரிசனக் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய்.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்களைகா கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அறநிலையத் துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா தொடங்கி உள்ளதில் கூட்டத்தைகா கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய்.1,000 வசூலிக்க முடிவு செய்திருப்பதாக ஆலய அறநிலையத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்தர் சஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளைத் தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே கந்தர் சஷ்டி விழாவின் போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால், ஏழை மக்கள் எவ்வாறு சுவாமி தரிசனம் செய்வார்கள்? அவர்களால் இந்தத் தொகையைச் செலுத்த இயலுமா? இவ்வளவு கட்டணம் ஏன்? அப்படியானால் ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் அலயமா? என அடுத்தடுத்து கேள்விகளை காட்டமாகவே எழுப்பினார்கள். -விளம்பரம்-
-விளம்பரம்- மேலும், இந்த மனு குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
கருத்துகள்