போதைப் பொருள்கள் கடத்தல் ஜாபர் சாதிக் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 நபர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
போதைப் பொருள்கள் கடத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்ட மங்கை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகியுமான
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோதமான பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறையும் தனியாகப் பதிவு செய்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
302 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரமுகர் ஜாபர் சாதிக் ஒரு பிரபலமான குற்றவாளி என்பதும், சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மை.
2019 ஆம் ஆண்டில், 38.687 கிலோ கெட்டமைன் எனும் போதை வஸ்தை மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாஃபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் பிடிபட்டனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் மாதம் 11-ஆம் தேதியில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! ஞானேஸ்வர் சிங் IPS மூலமாக நடத்திய விசாரணையில் 15/02/24 அன்று http:// F.NO .VIII/3/DZU/2024 வழக்கு பதிவு செய்து டில்லியில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்
இந்த வழக்கில் Zuko Overseas என்ற பெயர் தோன்றுகிறது மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஜாஃபர் சாதிக் மற்றும் ஒரு ஒரு பிரபலத்தால் தொடங்கப்பட்ட அதே நிறுவனமாகும்.
மே மாதம் 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜாஃபர் சாதிக் தமிழ்நாட்டைத் தனது வசிப்பிடமாக மாற்றினார் மற்றும் அவனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த முக்கியமான சிலருடன் கூட்டுச் சேர்ந்தார்.
2013- ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தலுக்காக ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதையும், 2019-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டதிலிருந்து தப்பியதையும் பற்றி எந்தத் தகவலையும் மறுக்கும் நிலை தற்போது போல் இல்லை என்பதை இந்த குற்றப்பத்திரிகை மெதுவாகவே நினைவுபடுத்துகிறது.
போதை கடத்தல் வழக்கில், மங்கை திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து, ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமான பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது
இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர், ஜாபர் சாத்திக்கின் நண்பர். மட்டுமின்றி, இவர்கள் இருவரும் சேர்ந்து பல தொழில்களும் கூட்டாகச் செய்து வந்தனர். அதனால் தொடர்ந்து இயக்குனர் அமீரிடமும் விசாரணையை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என, ஜாபர் சாதிக் மற்றும் அமீர் ஒன்றாக இணைந்து நடத்தி வந்த நிறுவனங்கள், வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர். நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் அம்பலமாக்கிருக்கும் நிலையில்,
ஜாபர் சாதிக்கின் மனைவி, சகோதரர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக், அமீர் உள்ளிட்ட12 பேர் மீது அமலாக்க துறை 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை கூடுதல் சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக அமீருக்கு சம்மன் அனுப்பி நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.
அதில் திரைப்பட இயக்குனர் அமீர் 12 வது குற்றவாளியாக உள்ளார். வழக்கு விசாரணையில் மற்ற விபரங்கள் தெரியவரும்.
கருத்துகள்