முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆலயத்தின் வருவாய் மூலம் நடத்தும் சுயநிதிக் கல்லூரிப் பணியாளர் நியமனம் ஹிந்து சமய மக்கள் மட்டுமே பெற உரிமை உள்ளது உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

சென்னை திருமயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ஆலய வருவாய் நிதியிலிருந்து ஹிந்து சமய

அறநிலையத் துறையின் சார்பில் திருக்குற்றாலத்தில் உள்ளது போல் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியைத் துவங்கி அது  ஹிந்து சமய அறநிலையதுறை யின் நிர்வாகத்தில் நடந்து வருகிறது அது முழுமையான சுயநிதிக் கல்லூரி ஹிந்து ஆலயத்தில் வரும் வருவாய் மூலம் HR&CE சட்டப்படி நடந்து வரும் நிலையில் சமீபத்தில் கல்லூரிக்கு சில பணியாளர்கள் நியமனம் செய்ய மாநில ஹிந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.

அந்தக் கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பகல், இரவுக் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களைத் தேர்வு செய்ய நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்தது, 2021 ஆம் ஆண்டு அறிவிப்பாணையும் வெளியிட்டதில், ஹிந்து மதத்தைச் சர்ந்தவர்கள் மட்டுமே கல்லூரிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என சட்ட விதிப்படி ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.


இதை எதிர்த்தும், இந்த அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரியும் இஸ்லாமிய மதம் சார்ந்த சுகைல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்த போது,

மனுதாரர் தரப்பில், அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனமாகும். அந்தக் கல்லூரி மதம் சார்ந்த நிறுவனமல்ல. கல்வி நிறுவனத்தில் மத அடிப்படையில் எந்தவிதமான பணி நியமனங்களுக்கு மேற்கொள்ள முடியாது. எனவே, தன்னை நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க வேண்டுமென்று வாதிடப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை தரப்பில், ஹிந்து சமய அறிநிலையச் சட்டப்படி, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் சுய நிதியிலிருந்து கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அரசிடம் நிதியுதவி எதுவும் பெறப்படவில்லை. இது சுயநிதிக் கல்லூரியாகும். கோவில் சார்பில் நடத்தப்படுவதால் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு ஊழியர்களை நியமிக்க அறநிலையத்துறைக்கு தனி உரிமையும், சட்டப்படியான அதிகாரமும் உள்ளது. எனவே, பணி நியமனங்களில் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும்    அவர் நியமனத்திற்கு தகுதி பெற முடியாது என்றும், அதனால் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் சமத்துவம் பறிக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

மனுதாரரின் வாதங்களை நிராகரித்த நீதிபதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மற்றும் பாகுபாடுகளைக் கையாளும் அரசியலமைப்பின் 16(1) மற்றும் 16(2) விதிகளின் கீழ் கல்லூரி வரவில்லை, ஆனால் அது சுயநிதிக் கல்லூரிகளின் கீழ் தான் வருகிறது. இந்திய அரசியலமைப்பின் 16(5) விதிமுறைகளை நன்கு கவனித்த நீதிமன்றத்தின்   1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 இயற்றப்பட்டதுசட்டப்பிரிவு 16(5) ஒரு மத அல்லது மதப்பிரிவு நிறுவனத்தின் விவகாரங்களுடன், அதன் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு பொறுப்பாளர், சம்பந்தப்பட்ட மதத்தைப் பின்பற்றுபவராக அல்லது அந்த மதப்பிரிவை சேர்ந்தவராக இருப்பதை தடுக்க முடியாது என்று கூறுகிறது.இதன் படி, மதம் சார்ந்த நிறுவனங்களில், மத விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வேறு மதத்தவராக இருக்கக் கூடாது என்ற விதி செல்லுபடியாகும். தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவில் வருவாய் நிதியிலிருந்து நடத்தப்படும் சுயநிதிக் கல்லூரி இது என்பதால், ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரிப் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எதிர்த்து ஏ. சுஹைல் என்பவர் தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தச் செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது என பலரும் பாராட்டும் நிலையில். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் வெற்றிக்கான சாத்தியங்கள் குறைவு தான் என்பது மூத்த வழக்குரைஞர் கள் கருத்து. ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பார்வை :- சென்னைமில்  திருமயிலாப்பூர்,      "மயிலையே கயிலை... கயிலையே மயிலை" என்பது வழக்கிலுள்ள வார்த்தையாகும், திருஞானசம்பந்தப் பெருமான், அப்பரடிகள், சுந்தரர், ஐயடிகளும், காடவர்கோன் நாயனாரும், நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழாரும், அம்பிகையும், ஸ்ரீ இராமபிரானும் வழிபட்ட சிவன் இங்கு ஸ்ரீ. கபாலீஸ்வரரும்  அன்னை கற்பகவல்லியம்மையுமாய் அருள்பாலிக்கும் ஸ்தலம்.



ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் H.D. லோவ் என்பவர் எழுதிய சென்னை சரித்திரத்தில் 1516 ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கீசியர்கள், துருக்க மூர்கள், நவாப்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலக் கிழக்கிந்திய பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீஷ்யர், முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி சென்னையைக் கைப்பற்றிப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டிருந்தார்களென அறியலாம். அவரது நூலில் (Volume - I பக்கம் 321 முதல் 322 வரை), பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672- ஆம் ஆண்டில் போர் நடந்த போது பிரெஞ்சுப் படைகளின் ஒரு பகுதி அருள்மிகு கபாலீஸ்வரர் சன்னதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்காலக் கபாலீசுவரம் 1672 ஆம் ஆண்டிலேயே இருந்ததெனலாம்.

முதலாம் இராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம். சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்தது மட்டுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்கும் வசதி இருந்திருக்க வேண்டுமென்றும் அறியக் கிடக்கின்றது. இலங்கையாகிய ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவா (Gova) முதலிய இடங்களில் ஆங்கில வெள்ளைக்கார பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோவிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம். இன்று சாந்தோம் தேவாலயமுள்ள இடத்தில் தான் முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்தது எனச் சான்றுகள் சாசனங்கள் கூறுகின்றன. அதற்கு முன் உள்ள வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. "துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என ஆரூரார் திருவாய் மலர்வது போல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்கத்துப் பேராசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. லாவ் கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது இந்த மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில் தான்.11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் ஸ்தலத்தில் தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இந்தத் துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இந்தத் துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்ததாக செய்தி Vestiges of Old Madras Vol. - I எனும் நூலில் காணலாம். அப்படி பல நூற்றாண்டுகளாக உள்ள ஆலய வருவாய் உள்ள ஹிந்து வழிபாட்டு திருத்தளத்தை சார்ந்த கல்லூரியில் யார் வேண்டுமானாலும் கல்வி பயில முடியும் ஆனால் பணி செய்யும் உரிமை ஹிந்து மக்கள் மட்டுமே என்பது சட்டப்பூர்வமாக வழங்கிய தீர்ப்பாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...