மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மற்றொரு படகு மீது மோதியதில்
நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து நேற்று விபத்துக்குள்ளானதில் ஒரு கடற்படை வீரர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 99 உயிருடன் பேர் மீட்கப்பட்டனர் என மாநில முதலவர் தெரிவித்துள்ளார். ‘நீல்கமல்' எனும் சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலாத் தலமான 'எலிபெண்டா' தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்த போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சேர்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து,
பயணிகள் படகின் மீது மோதியதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இரவு 7.30 மணி நிலவரப்படி, இந்த விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் சிக்கித் தவித்த 99 பேரையும் இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனர்.11 கடற்படை படகுகள், மூன்று கடல்சார் காவல் படகுகள், ஒரு கடலோரக் காவல் படை படகு மற்றும் நான்கு ஹெலிகாப்டர்கள் இந்த மீட்புப் பணி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் துறையினர், ஜவாஹர்லால் நேரு துறைமுக ஆணைய ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவினார்கள்.
கருத்துகள்