மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தை கைவிட உள்ளதாகத் தகவல்.
2015 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைத் தீர்க்கவும், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்கப் பத்திரத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை தடுக்கவும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதை ஈர்க்கவும் இதில் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுதோறும் வட்டியும் வழங்கப்படுமென அரசு அறிவித்தது. எனவே ஏராளமானவர்கள் தங்களுடைய பணத்தை தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்த நிலையில் நடப்பு ஆண்டில் இதுவரை அரசு தங்க பத்திர வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை.
தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 2015 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்கப் பத்திரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. மக்கள் ஏராளமானவர்கள் தங்களுடைய பணத்தை தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்த நிலையில் நடப்பு ஆண்டில் இதுவரை அரசு தங்கப் பத்திரங்கள் வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. 2025 - 26 ஆம் நிதி ஆண்டில் தங்கப் பத்திரத் திட்டம் முழுமையாகக் கைவிடப்படும் என தகவல் வெளியாகிறது. இது தொடர்பாக வர்த்தக புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தங்கப் பத்திரத் திட்டம் அரசு எதிர்பார்த்த அரசின் நோக்கத்தை நிறைவேற்ற வில்லை என மூத்த அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறுகிறது,
குறிப்பாக தங்கப் பத்திரத் திட்டம் அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கிறது. தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அந்தப் பத்திரம் முதிர்ச்சி அடையும் நாளில் தங்கத்தின் விலை என்னவோ அதனை அரசு தர வேண்டும், அது தவிர ஆண்டுதோறும் வட்டியும் கணக்கீடு செய்து தர வேண்டும்.
தங்கத்தின் விலை கடந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அரசு தங்க பத்திரம் மூலம் திரட்டிய பணத்தை விட பல மடங்குத் தொகையை திரும்ப வழங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. இது அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக முதல் முதலில் அரசு தங்கப் பத்திரத்தை வெளியிட்ட போது 245 கோடி ரூபாயை நிதியாகத் திரட்டியது.
அப்போது 49 லட்சம் யூனிட் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,684 ரூபாய் என இருந்தது. அதுவே முதிர்ச்சி அடைந்து திரும்ப அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கும் போது 6132 ரூபாய் என ஒரு கிராமின் விலை உயர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட 120 சதவீதம் இது மதிப்பு அதிகமாகும். அது மட்டுமின்றி ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும். 245 கோடி நிதியாகத் திரட்டி அரசு அதனை திரும்ப வழங்கும் போது 560 கோடி ரூபாய் தங்கத்தின் விலை மற்றும் 49 கோடி ரூபாய் வட்டி என 610 கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிலை இருந்தது.
எனவே இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே சிறந்தது என அரசு கருதுகிறதாம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது அரசு நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. எனவே அது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக புதிய தங்க பத்திரங்கள் வெளியீடு கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
கருத்துகள்