இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம்
செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்ததையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகையில் ஜனவரி மாதம். 14-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார். கரக்பூர் ஐஐடி-யில் பட்டம் பெற்றவர், 1984-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.
இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு காலம் அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாவார். ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். தொடக்க காலத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றியுள்ளார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்
களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
கருத்துகள்