திருப்பூர் சிவில் வழக்கை விசாரித்த பெண் காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
திருப்பூர் ஆண்டிபாளையம் குமார் (வயது 40). இவருக்கு செல்லம் நகர்- பாரப்பாளையம் செல்லும் சாலையில் 30 சென்ட் நிலத்தை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா னந்தம் மற்றும் ராஜா ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். திடீரென உரிமையாளர் தரப்பிலிருந்து இடத்தைக் காலி செய்யமாறு கூறியுள்ளனர். ஜீவானந்தம் மற்றும் ராஜா அதிகளவில் செலவு செய்து இருப்பதாகவும், காலி செய்ய மறுப்புத் தெரிவித்தாகவும் தெரிகிறது.
அது குறித்து குமார். திருப்பூர் மத்தியக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் ராஜேஸ்வரி இது சிவில் வழக்கு இங்கு விசாரணை நடத்த முடியாது எனத் தெரியவில்லை மேலும் ராஜேஸ்வரி, விசாரணை மேற்கொண்டு வழக்கு பதியாமல் CSR மனு ரசீது மட்டும் போட்டுள் ளார். இந்த நிலையில் இடத்தை காலி செய்து தரக்கோரி இரண்டு
தரப்பினருக்குமிடையே பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில் சிவில் பிரச்னையில் முறையாக விசாரித்து அவர்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணும் படி தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என ஆய்வாளர் மீது புகார் எழுந்தது தொடர் பாக விசாரணை நடத்த ஆணையர் தெரிவித்த நிலையில் காவல்துறை துணை ஆணையர் இராஜராஜன் விசாரித்து. மாநகர ஆணையருக்கு அறிக்கை சமர்பித்ததையடுத்து ஆய்வாளர் ராஜேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
கருத்துகள்