மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்த்து
20 கிமீ நடந்து மதுரை கோரிப்பாளையம்- தமுக்கம் மைதானம் சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், மேலூர் நரசிங்கப்பட்டியிலிருந்து நடைபயணமாகச் சென்று ஆயிரக்கனக்கான மக்கள் மதுரையில் தமுக்கம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் மலைப் பகுதிகளை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூரில் கடையடைப்பும் தடையை மீறி பேரணியால் எழுச்சிமயமாகக் காணப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஏலம் விடும் வரையில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் டஸ்ங்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசும் அறிவித்திருந்தது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மேலூரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அத்துடன் நரசிங்கப்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுமார் 20 கிமீ நடந்து மதுரை மாநகரை வந்தடைந்தனர். மதுரையில் தமுக்கம் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பாக அமர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; டங்ஸ்டன் சுரங்க அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தியதால் மதுரையிலும் எழுச்சியுடன் போராட்டம் நடந்தது. மதுரையின் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நான்கு மாவட்டத்தில் இருந்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் மதுரையில் அனுமதி இன்றிப் பேரணி சென்ற 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
மதுரை டங்ஸ்ட்ன் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்களில் 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லை- பேரியாறு ஒரு போக பாசன விவசாயப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள், போராடுகின்றனர். மேலூர் பகுதியில் முல்லை- பேரியாறு ஒருபோக பாசன விவசாயிகள், கிராம மக்கள், வியாபாரிகள் ஜனவரி மாதம்.7 ஆம் தேதி பேரணியாக பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியானது,மேலூரிலிருந்து மதுரை தமுக்கம் மைதானம் எதிராக உள்ள தலைமை அஞ்சல் நிலையம் வரை நடைபெற்றது.
பேரணியின் போது, சுங்கச்சாவடி அருகில் காவல்துறையினருக்கும், மக்களுக்கும் இடையே தடுக்க முயன்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறை முன்னே செல்ல, அவர்களின் போராட்ட அணிவகுப்புத் தொடர்ந்தது,
பேரணியின் காரணமாக, மதுரை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கு போக்குவரத்து முடங்கிய நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பேரணி சென்றதாக போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேரணியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை காணொளிக் காட்சிகள் மூலம் அடையாளம் காணும் பணியிலும் காவல்துறையினர் இறங்கினர்..
டங்ஸ்டன் மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்
கருத்துகள்