மதுரை நகரில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பூஜை செய்து வரும் அர்ச்சகர்களின் தீபாராதனை
தட்டு காணிக்கையை இந்து சமய அறநிலையத் துறை தட்டிப் பறித்து உண்டியலில் போட உத்தரவிட்ட செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல். மதுரை நகரில் நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தீபாரத்தணை தட்டில் பக்தர்கள் சுய விருப்பத்தின் பேரில் பிராமணர் தர்மம் எனப் போடும் தட்டுக் காணிக்கையை அர்ச்சகர்கள்
எடுக்கக் கூடாது, என தட்டிப் பறித்து பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும்; இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மதுரை ஸ்ரீ பாலதண்டாயுத சுவாமி கோவில் அறங்காவலர் மற்றும் செயல் அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டார். அதனால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனிக்க வேண்டும் எனவும், தட்டுக் காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மதுரை நேதாஜி ரோட்டில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள்
அவர்களாகவே விரும்பி அர்ச்சகர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்துமாறு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அர்ச்சகர்களின் தட்டுகளில் போடப்படும் காணிக்கைகள் உண்டியலில் போடும் பணி கோவில் மணியம் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தட்டுக் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது கோவில் அர்ச்சகர்களை அவமதிக்கும் செயலாகும். இந்த செயலை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தக் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பது கிடையாது. காணிக்கை தட்டில் பக்தர்கள் விருப்பப்பட்டு போடும் காணிக்கைகள் தான் அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அப்படியிருக்கும் தட்டுக் காணிக்கையை உண்டியலில் போடவேண்டும் என திடீரென உத்தரவிட்டால் காலம் காலமாக கோவிலில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தச் செயல் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது.
ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தீபாராதணை தட்டில் விழும் காணிக்கை எப்போதும் போல் அர்ச்சகர்களுக்கே சொந்தம். இதனால் தட்டுக் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த கோயில் செயல் அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தவறினால் இந்து மக்கள் கட்சி சார்பில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதில் பொது நீதி யாதெனில்: ஹிந்து ஆலயங்கள் ஏதோ அறநிலையத் துறை உருவாக்கி மக்கள் வழிபட்டு வந்தது போல் இந்த நடவடிக்கை உள்ளது உண்டியல் வசூல் செய்து வரும் அறநிலையத் துறை ஒரு விபூதி பொட்டலம் கூட சொந்த பணத்தில் வாங்காமல் மக்கள் பணம் கொள்ளையடித்த நிலையில் இது பிராமண வாழ்வியல் நெறி முறைகள் இதில் தலையிட அறநிலையத் துறைக்கு சட்டப்படி உரிமை இல்லை.
மதுரை மாநகரம் நேதாஜி சாலை அருள்மிகு. தண்டாயுதபாணிசுவாமி திருக்கோவில் HR&CE சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோவிலாகும், இந்த நிலையில் தற்போது கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றறிக்கை தொடர்பாக ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
கருத்துகள்