குழந்தைத் திருமணத்தை நடத்தி வைக்கும் அனைவருக்கும் தண்டனை.
குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், விழா மற்றும் விருந்துண்ண வருவோர், திருமணத்திற்கு வந்த புகைப்படம் எடுப்பவர், சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய வந்த புரோகிதர், திருமணத்தில் 'செல்பி' எடுத்துக் கொள்பவர், சீரியல் செட் போடும் நபர் நாயனக்கார மேளம் வாசிக்கும் நபர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனையும், அபராதமும் உண்டு:
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பணி செய்த வகையில் அப்போது எச்சரிக்கை விடுத்தார் காரணம் அங்கே நடந்த ஒரு திருமண நிகழ்வு அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 வது ஆட்சியராகப் பணியாற்றிய பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ் குழந்தைத் திருமணங்கள் தடுப்பில் அதிக ஈடுபாடு காட்டினார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 31.01.2025 அன்று க.தர்பகராஜ் ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.குழந்தைத் திருமணத் தடைச் ட்டம் -2006
இந்திய சட்டப்படி, குழந்தைத் திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் செய்வதாகும். பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் இளம் பெண்களிடையே நடைபெறுகின்றன. அவர்களில் பலர் மோசமான சமூக-பொருளதார நிலை மற்றும் விழிப்புணர்வில்லாதவர்கள்.
குழந்தைத் திருமணத்தை ஒழிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இது ஒரு பொதுவான நிகழ்வு. சமூகத்தில் குழந்தைத் திருமணங்களை ஒழிப்பதற்காக, இந்திய அரசு முந்தைய சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், 1929 ஐ இரத்து செய்து, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 ஐ இயற்றியது. இந்தச் சட்டம் குழந்தை திருமணங்களைத் தடுப்பது, பாதுகாப்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அத்தகைய திருமணங்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும். அவற்றை வழங்குபவர்கள் அல்லது நடத்துபவர்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு 30.12.2009 ஆம் நாளன்று மாநில விதிகளை வகுத்து அறிவித்தது. இந்தச்சட்டத்தை திறம்படச் செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்தின் சமூக நல அலுவலர் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் அந்த அலுவலர்கள், தகவல் தொடர்பு முறைகள் மூலம் பெறப்படும் தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், குழந்தைத் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிக்கவும் முழுமையாக அதிகாரமுள்ளது. கிராமப்புறங்களில் நடக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில், ஊராட்சி மன்றங்கள் அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளாக அரசு செயல்பாடுகளில் :
1 பொம்மலாட்டம், வீதி நாடகம், பேரணிகள், கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைத் திருமணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
2.குழந்தை திருமணத்தின் தீமைகளிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்துத் துறைகளுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
3.பெண் குழந்தைகளின் கல்வியை மையமாக வைத்து தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் திருமண உதவித் திட்டங்கள் பெண் குழந்தைகளின் 18 வயதை எட்டியதும் பயன்பெறும் வகையில் குழந்தை திருமணங்களை ஒழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
4.யுனிசெஃப் நிதியுதவியுடன், குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் 15 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு துறைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
5 சட்டம் மற்றும் விதிகள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டதன் மூலம் சட்டம் மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியது.
குழந்தைத் திருமணத்தை ரத்து செய்தல் மற்றும் செல்லாத தன்மையாக்குதல்
குழந்தைத் திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் முடிந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் குழந்தைத் திருமணத்தை ரத்து செய்யலாம். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை மட்டுமே திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியும். சில சூழ்நிலைகளில், குழந்தை திருமணம் செல்லாது மற்றும் ரத்து செய்யப்படலாம் இந்த நிலையில் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் 1947 சுதந்திர காலத்திற்கு பிறகு தான் செயலாக்கம் பெறுகிறது அதற்கு முந்தைய சமஸ்தானத்தின் நிர்வாக காலத்தில் இந்த நிலை இல்லை இது குறித்து ஒரு நீள் பார்வை:- 'தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்' என எட்கர் தர்ஸ்டன் எழுதிய'தென்னிந்திய இன வரைவியல் குறிப்புகள்' என்ற நூலில் அதாவது (பெருந்திரட்டிலிருந்து) திருமணங்கள் தொடர்பான ஒரு சிறு பகுதியே இந்த நூலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
துவக்கத்தில் ஒரு பிராமணர் அல்லது அந்தணர் வீட்டு ஐந்து நாள் திருமணம் பற்றி விளக்கி (இந்த விவரிப்பிலேயே அறியாப் பருவத் திருமணங்கள் தான்) தொடர்ந்து ராஜுக்களிலிருந்து கோண்டு பழங்குடிகள் வரை பல்வேறு ஜாதியினருடைய திருமணங்களின் முக்கியமான சடங்குகளை விளக்குகிறார் தர்ஸ்டன்.
அரசு அறிக்கைகளிலும் நூல்களிலும் பத்திரிகைகளிலும் வேறு பதிப்புகளிலும் புதைந்து கிடந்த, பல்வேறு பகுதிகளில் அலைந்து மாவட்ட அலுவலர்கள், தனிநபர்களிடம் பேட்டி கண்டு எழுதிக் கேட்டு சேகரித்த ஏராளமான விஷயங்களை நூலில் திரட்டித் தந்திருக்கிறார்.
விசாகப்பட்டினத்திலுள்ள 'கடப' என்ற ஜாதியில் திருமணத்துக்கு முன் மணமகன் அவருடைய மாமனாரிடம் ஓராண்டுக்கு வேலை செய்ய வேண்டியிருந்ததையும், பின்னர் அதற்கு ஈடாகப் பணம் தரப்பட்டதையும் தெலுங்கு ராஜுக்கள், வெலமா ஜாதிகளில் மணமகனுக்குப் பதிலாக சத்திரிய முறைப்படி வாளை அனுப்புவதையும், திருநெல்வேலி மறவர்கள் ஒரு கம்பை அனுப்பிவைத்துத் தாலி கட்டுவதையும் பதிவு செய்துள்ளார் தர்ஸ்டன்.
கிழக்குக் கடற்கரையில் இருக்கும் அதாவது கீழக்கரை மரைக்காயர்கள் பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகின்றனர் என்பது போன்ற எண்ணற்ற தகவல்கள் அதில் பரவி விரவிக் கிடக்கின்றன. அத்தை மகள், மாமன் மகளை மணப்பது தொடர்பான வினோதமான வழக்கங்களுடன் தர்ஸ்டன் தெரிவித்துள்ள எத்தனையோ சடங்குகள் இப்போதில்லை. அல்லது உருமாறி வெவ்வேறு வடிவெடுத்து விட்டிருக்கின்றன.
வியக்க வைக்கும் தகவல்கள் நிறைந்த கருவூலம் இந்த நூல் வரலாறு அறியாமல் இருக்கும் இந்த தலைமுறை அடுத்த தலைமுறைக்கு சொல்லிச் செல்ல வேண்டிய தகவல் அதிகம் அதை அறிந்து கொள்ளாத இளைய சமுதாயம் அடுத்த இரண்டு தலைமுறைகள் தாண்டிய பிறகு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பண்பாடுகள் மறைந்து போகலாம், ஆகவே இது போன்ற நூல்கள் காலப் பெட்டகம் அது இக் காலத்தில் ஒரு வரலாற்றுப் பெட்டகம்.குஜராத்திக் கவிஞரும் சீர்திருத்தவாதியுமான பி.எம். மலபாரி எனும் பார்சி அப்போது கல்கத்தா ஆட்சியில் இருந்த வைஸ்ராய் ரிப்பன் பிரபுவிடம் பால்ய விவாஹம், விதவைக் கொடுமைகள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை 1884 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி பிரிட்டிஷ் ஆட்சி பல்வேறு பிரமுகர்களுக்கு அனுப்பிக் கருத்து கேட்ட போது மராட்டிய சமூகநீதிப் போராளி ஜோதிபாபுலே பால்ய விவாஹத்துக்கு தடைபோட வேண்டும் என உறுதியாகக் கூறினார். கவிஞர் மலபாரி, இங்கிலாந்துக்கே சென்று அந்தச் சட்டத்துக்கு ஆதரவு திரட்ட முயன்ற போது, பால் கங்காதர திலகருக்கு கோபம் வந்தது. “இவர் ஒரு பார்சிக்காரர். இவர் எப்படி ஹிந்து மதப் பிரச்சினைகளில் தலையிடலாம்?” என தனது ‘கேசரி’ பத்திரிகையில் எழுதினார். கடும் எதிர்ப்புகளுக்கிடையே பெண்களின் திருமண வயதை பத்திலிருந்து பனிரெண்டாக உயர்த்தி ஒரு மசோதா வந்தது. இதுவே ஆரம்பம் தற்போது தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடநத 6 ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீத குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக தகவல் உள்ளது.
கருத்துகள்