தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள், 1973 - விதி 8 (1) (c) க்கு திருத்தம் புதிய கட்டுப்பாட்டு விதி
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள், 1973 - விதி 8 (1) (c) க்கு திருத்தம் செய்து அரசாணை முன்பே வெளியிடப்பட்டது ஆனால் முறையாக
அமல்படுத்தப்படவில்லை
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள், 1973 - விதி 8 (1) (c) க்கு திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது இந்த நிலையில் அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி செயல்படும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது துறை சார்ந்த (Departmental Action)
நடவடிக்கை எடுத்து உரிய தண்டனைகள் வழங்கப்படும்.தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு 1973-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளதாக மார்ச் மாதம் 7 ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது.
அது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தின் தணிக்கையாளர் வெங்கடேசன்
“மாநில அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி தாள்களில் வந்த செய்தி புதிதாக நடத்தை விதிகளில் ஏற்படுத்தபட்டவை அல்ல.
1973- ஆம் ஆண்டில் நடத்தை விதிகள் ஏற்படுத்தி அரசாணை எண் 2226 public (Service-A) நாள் 18-8-1973 மூலம் அரசு ஊழியர்களுக்கான நடத்தைவிதிகள் வடிவமைக்கபட்ட போதே அனைத்து விதிகளும் உள்ளன.
அதைத் தாண்டி 1988, 2003, 2016 ஆம் ஆண்டுகளகல் வேலைநிறுத்தங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றதாகவும். இந்த நடத்தைவிதிகள் இருப்பதால் தான் நீதிமன்றங்கள் வேலைநிறுத்தம் சட்டத்திற்கு புறம்பானவை என்று தீர்ப்புகள் வழங்குவதாகவும்.
அரசு சட்டபடியும், கொடுத்த வாக்குறுதிகளைகா காப்பாற்றும் வகையிலும் நடந்தால் நாமும் சட்டபடி நடத்தை விதிகளை மீறாமல் நடக்கலாம். ஒருவர் மீறினால் தான் குற்றம். அரசு ஊழியர்- மற்றும் அலுவலர்கள் ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக மீறினால் அது குற்றமாகாது என்பது அவரது வாதம்.
அதனால் தான் கடந்த காலத்தில் அவர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களில் எவ்வித பாதிப்பும் இன்றி பணிகாலமாக கருதப்பட்டு அதற்கான ஊதியத்தையும் பெற்றனர்.
டாக்டர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட வாயிற்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து, 2003-ஆம் ஆண்டில், செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த நிலையில் ஒரே ஆணையில் எஸ்மா டெஸ்மா சட்டம் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து உலக அளவில் பேசப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி எம்.பி.ஷா, லக்ஷ்மணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 2-ஆம் பாகத்திலுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, வன்முறையற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அரசு ஊழியர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இந்த அடிப்படை உரிமைகள் யாவும் அரசு நிர்ணயிக்கும் Reasonable Restrictions க்கு உட்பட்டதாகும். என தீர்ப்பு வழங்கியது.
பல்வேறு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தங்களுடைய தீர்ப்புகளில் Reasonable Restrictions-க்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை அரசு ஊழியர்கள் அனுபவிக்கத் தடையேதுமில்லை என்று தான் கூறியுள்ளன. ஆனால்தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் (Tamilnadu Government Servants` Conduct Rules) என்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சட்ட பூர்வமான குடும்ப உறுப்பினர்களை வகைப்படுத்தல், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கூட்டுறவு சங்கங்களில் பங்கேற்றல், அரசு தொடர்பற்ற தனிப்பட்ட தொழில் அல்லது வேலை செய்தல், ஏலச் சீட்டு கட்டுதல், வரதட்சனை, கொடை, பரிசுகள் வாங்குதல், பணியில் இருக்கும் போது உயர்கல்வி பயிலல், வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு வாங்குதல். அலுவல் நேரங்களில் ஆர்ப்பாட்டம் (Demonstration) செய்தல், சங்க சந்தா வசூலித்தல், முதலீடுகள் செய்தல் மற்றும் கடன் வாங்குதல்;
கொடுத்தல், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தல், அரசியல் கட்சியில் சேர்தல் மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல், ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராதல், இருதார திருமனம் புரிதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், போதைதரும் மருந்துகள் மற்றும் மதுபானங்கள் அருந்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்தல் போன்றவைகள் குறித்தான நடத்தை விதிகள் விரிவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்களே ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே. தமிழக அரசு தனது மாநில அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. மேலும், அரசு ஊழியர்கள் அலுவலகம் சாராத எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான புதிய விதிகள் குறித்து நாம் பார்க்கலாம்.தமிழக அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விதிகளை அனைத்து அரசு ஊழியர்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.இதற்கிடையே இந்த நடத்தை விதிகளில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன.வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, "அரசின் அனுமதி இல்லாமல் அரசு ஊழியர்கள், அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ரூபாய்.25,000க்கும் அதிகமான பரிசுகளை வாங்கக்கூடாது. திருமணம் உள்ளிட்ட மதச் சடங்குகளின் போது மட்டும் ரூபாய்.25,000 க்கு அதிகமான பரிசுகளைப் பெறலாம். இருப்பினும் அதையும் ஒரு மாதத்திற்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்
எந்தவொரு அரசு ஊழியரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அல்லது அதற்கான தூண்டுதலில் ஈடுபடவோ கூடாது. அனுமதியின்றி வேலைக்குச் செல்லாமல் இருப்பதும் கடமைகளைப் புறக்கணிப்பதும், போராட்டமாகவே கருதப்படும்.அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது.. அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது. அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ஒரு அரசு ஊழியர் தனது அரசுப் பணிகளைத் தவிர அலுவல் சாரா கூட்டம் அல்லது மாநாட்டில் பங்கேற்கவோ தலைமை தாங்கவோ கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது. அரசு ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது. வேறு எந்தவொரு விதத்திலும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது. தேர்தலில் குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது.அரசு ஊழியரின் குடும்பத்தினர் யாராவது அரசியல் கட்சி, அமைப்புகளில் இருந்தால் அதை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் வாக்களிக்கலாம். ஆனால், யாருக்காகவும் பிரச்சாரம் செய்யக்கூடாது. அரசுக்கு அவமானம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. நமது நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, கண்ணியம் ஆகியவற்றைப் பாதிக்கும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மேலும், இது போன்ற சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. அலுவலகம் அல்லது பொது இடங்களுக்கு வரும்போதும் மது அருந்தி விட்டு வரக்கூடாது. அதிகாரத்தை வேறு எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்தக்கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் தங்களின் அசையும்; அசையாச் சொத்துகள், நகைகள், செலுத்திய காப்பீட்டு கட்டணங்கள், வங்கி வைப்புகள், சேமநல நிதி (Provident Fund), கடன்களும் பொறுப்புகளும் (Loans and Liabilities) குறித்தான முழு விவரங்கள், முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தவுடனும், பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒராண்டு முன்னரும் குறிப்பிட்ட படிவங்களில் தங்களது சொத்து-பொறுப்பு பட்டியல்களை (Assets and Liabilities Statements) அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.அரசு ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமல்ல போக்குவரத்துத் துறை சார்ந்த சங்கம், மின்சார வாரியத்தின் ஊழியர்கள் சங்கம், பிற தொழிலாளர்கள், எந்த அரசியல் கட்சிகள் சார்ந்தும் போராடக் கூடாது, மத்திய மாநில அரசை யாரும் விமர்சிக்கக் கூடாது. இப்படிக் கொண்டு வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்.
லஞ்ச ஊழல் தீவிர கண்காணிப்பில் அணைத்து அலுவலகங்கள் செயல்படும்
மொத்தத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலம் போல் இருக்க வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.
அதை அரசு நிறைவேற்ற உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் வெறும் சட்டமும் அரசாணை மட்டுமே பயன்படாது.ஏற்கனவே ஊழியர்கள் சார்ந்த GO Ms.No.6, P&AR (A) Department, dated.21.01.2008 மற்றும் அரசணை (நிலை) எண்.225 ப(ம)நி.சீ(எ) துறை, நாள். 11.9.1998 மற்றும் GOMs.No.76, P&AR (A) துறை, தேதி: 20.3.07 மற்றும் GO Ms.No.427, P&AR தேதியிட்ட 13.12.93 மற்றும் அ.நி.எண்.39 ப.ம.நி.சீ (அ) துறை, நாள். 9.3.2010: அமல் 9.3.2010 மற்றும் அரசு ஆணை நிலை எண். 225, ப.ம.நிசீ.துறை நாள்.11.9.1998 ஆகிய அரசாணைகள் இருந்த நிலையில் தற்போது புதிய கட்டுபாடுகள் திருத்த விதிமுறைகள் மூலம் அமலாகிறது .
கருத்துகள்