தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி பணி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு நிர்வாகக் காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவது காலகாலமாக நடக்கும் நிகழ்வு
அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயர் அலுவலர்களுக்குப் பணியில் (பதவி) உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசுப் பணியிட மாற்றமும் சில நேரங்களில் செய்யப்படுகிறது.
கருத்துகள்