மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலுக்கு ஏழு மாதங்களுக்கு பின்னர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையராக யக்ஞநாராயணன் என்பவர்
நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்பே கோவிலின் துணை ஆணையராக இருந்த கலைவாணன் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதியில் ஓய்வு பெற்ற பின்னர் ஏழு மாதங்களாக அந்தப் பணியிடம் காலியாகவே இருந்தது. இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை அதை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியில் துவங்குவதன் காரணமாகவும், அன்றாட திருப்பணிகளைக் கவனிக்கவும் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் பணியாற்றிய யக்ஞநாராயணனுக்கு பணி உயர்வு அளித்து இங்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில், அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் பணியாற்றியவர் ஆவார்
கருத்துகள்