தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின்னர் பேரவைக்குள் சென்றார்.
அவர் அறிவித்த நிதிநிலை அறிக்கையில் ரூபாய்.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை அறிவியல் மையம்,
UPSC முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு ரூபாய்.50,000 ஊக்கத்தொகை,
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண் செய்யலாம்!
இனி மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூபாய்.1000 ஊக்கத் தொகை!
மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை
பழமை வாய்ந்த பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை சீரமைக்க மானியம். (பழமை என்பது குறித்து ஆண்டு கூறவில்லை) தமிழ்நாடு நிதிநிலை அறிக்கயில் குறிப்பாக மதுரைக்கு 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வைகை ஆற்றங்கரை மேம்பாடு , மாநகராட்சி சாலைகள் மேம்பாடு , தொழில் வளர்ச்சி மூலமான வேலை வாய்ப்புகள் , அகர மொழிகளின் அருங்காட்சியகம் , பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் , காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என மதுரைக்கான அறிவிப்புகள் வந்தது.
275 கோடி மதிப்பீட்டில் 1000 மாணவிகள் பயன்பெறும் தங்கிப் பயிலும் நவீன வசதிகளுடன் கூடிய 3 விடுதிகள் ,
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூபாய் 130 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்துதல்
வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சிப் பகுதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள் , தெருவிளக்குகள் , பூங்காங்கள் உருவாக்கம்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் விடுதி வசதிகளுடன் கூடிய புதிய தொழிற் பயிற்சி மையம்.
250 கோடி முதலீட்டில் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூரில் காலணி தொழிற்பூங்கா.
2000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மதுரை மாவட்டம் கருத்தப் புளியம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை,
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படிப்பகம்,
உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உறுதிபடுத்தும் துணை திறன்மிகு மையம்
மதுரை அரிட்டாபட்டி போன்ற பல்லுயிரினங்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாக்க 1 கோடி ரூபாய்.
மதுரை மாநகரத்திற்கு புதிய 100 மின் பேருந்துகள்.
மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ 11,368 கோடி திட்டத்திற்கான மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடித் துவக்கம்
மதுரை - சிவகங்கை மரபு சார்ந்த சுற்றுலா வழித்தடம்.
48 கிலோமீட்டர் மதுரை வெளிவட்டச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை.
75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் புதிய திட்டம்.
மதுரை உள்ளிட்ட 11 நகரங்களுக்கென தனியான வெப்ப அலை செயல்திட்டங்கள்.
10 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான அன்புச் சோலை மையம் .
மதுரையில் அகர மொழிகளின் அருங்காட்சியகம்.டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம்(CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ரூபாய்.70 கோடி ஒதுக்கீடு. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.
இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேலும் நடந்து முடிந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டு பதிப்பாளர்கள் இன்னும் 28 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்னும் 45 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையினைத் திருக்குறள் பெற்றிடும். இதற்காக தமிழ்நாடு அரசு ரூபாய்.133 லட்சம் ஒதுக்கியுள்ளது." என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்
மூன்றாம் பாலினத்தோர் ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவர். ரூபாய்.2000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழிக் கொள்கையை விட்டுதர மாட்டோம் என்றும்,
சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள்
ரூபாய்.600 கோடியில் 25,000 வீடுகள்!
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் காங்கிரிட் வீடுகள் கட்ட ரூபாய்.3500 கோடி ஒதுக்கப்படும்
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூபாய்.2,200 ஒதுக்கீடு
திருச்சிராப்பள்ளி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க ரூபாய்.400 கோடியில் திட்டம் தொடங்கப்படும்
வேளச்சேரியில் ரூபாய்.310 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். . உதயகுமார் த/பெ. தர்மலிங்கம் என்ற திமுக சட்ட மன்ற உறுப்பினர் மகனால் வடிவமைத்து காங்கிரஸ்-திமுக மத்தியில் கூட்டணியில் இருக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ₹ சின்னம் அல்லது முத்திரை இப்போது அதே திமுகவால் நீக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிதி அமைச்சர்
ப.சிதம்பரம் உதயகுமாரை பாராட்டிய நிலையில் இப்போது அது நீக்கப்பட்டு புதிய ரூ சேர்ந்துள்ளது. நாம் என்னதான் வட மாகாணத்தவரைத் திட்டினாலும் அவர்கள் மொழியை பலர் வெறுத்தாலும் அவர்களுடைய கலாச்சாரம் இங்கு வேகமாகவே பரவி வருவதை சமீபத்திய காலமாகக் காண முடிகிறது. பஞ்சாபி சுடிதார் இங்கு வெகு இயல்பான உடையாக மாறி நிண்ட நாட்கள் ஆகின்றன. பானி பூரி, போண்டா வடையை மிஞ்சி இப்போது புகழ் பெற்ற தின்பண்டம். வீரத் தமிழ் திருமணங்கள் முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம் கலந்து மாறிவிட்டது. மார்வாடி உடையலங்காரங்கள், ஹல்தி, மெஹந்தி , சங்கீத் எல்லாம் கட்டாயம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஒத்திகைகள், உடையலங்காரத் திட்டங்கள், வீடியோ செலெக்ஷன் அனைத்தும் மாதக்கணக்கில் நடக்கின்றன ரிசப்ஷன் மெனுவில் ரூமாலி ரோட்டி, ஸ்வீட்ஸ் தொடங்கி இட்லி தோசையை தவிர அனைத்தும் வட இந்திய உணவுகள் தான்.
பாராத் இன்னொரு கட்டாயம். கோஷ்டியாக ஆடிக்கொண்டே உள்ளே வருவதும், ஒரு பந்தலை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு நடப்பதும், மேடையில் மணமக்கள் மற்றும் அவர்கள் தாத்தா பாட்டி உட்பட அனைவரும் குரூப் டான்ஸ் ஆடுவதும் , கிட்டத்தட்ட 'ஹம் ஆப்கே ஹை கவுன்' படத்தை மீண்டும் பார்ப்பது போலவே இருக்கிறது !
சரி, வாங்க ஹோலி கொண்டாடுவோம்! என்ற நிலையில் தற்போது இந்திய படிப்பது குறித்து விவாதிக்க வேண்டிய நிலை இல்லை, என்பது பலருக்கும் புரியாத நிலையில் பணத்தின் குறியீட்டை மாற்ற, தமிழ்நாடு அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கு? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இனி எப்படி?தமிழில் ரூ தனித்து வருமா? உரூ என உகரத்துடன் வருமா? ‘ முதல்வர்’ பதில் சொல்வாரா? என அவரது வினா பலரும் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் அரசியல் வாதிகள் பலம் மக்களின் பலஹீனம். மொத்தத்தில் நிதி நிலை அறிக்கை. நாட்டின் கடன் சுமை வலியுறுத்தி உள்ளது
மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது.உயர்ந்துகொண்டிருக்கும்தமிழ்நாட்டின் கடன் சுமை! தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடன் மதிப்பும். உயர்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.1,62,096.76/- கோடி (1 லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடியே 76 லட்சம்) கடன் வாங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்