திமுக ஏற்பாட்டில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில முதல்வர்கள் பல கட்சிகளின் தலைவர்கள் சென்னை வருகை
திமுக ஏற்பாட்டில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் இன்று சென்னை வந்தார்.
அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்திருந்தனர்.
2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுவதில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்தனர்.
அதன்படி, நாளை நடைபெறும் தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலத்தின் முதலமைச்சர் இன்று சென்னைக்கு வந்த நிலையில்
பினராயி விஜயனை சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு (மார்ச் மாதம் 20 ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னைக்கு சண்டிகரிலிருந்து தனி விமானத்தில் மாலை இரவு 7 மணி அளவில் வந்தவரை
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சென்னைக்கு ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இன்று மாலை 7:20 மணிக்கு வந்தவரை, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்
தொடரந்து, நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காளம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இக்கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மார்ச் மாதம் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்ததுடன், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்களை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் அண்மையில் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.இந்த நிலையில், சென்னையில் நாளை நடைபெறவுள்ள தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக குறிப்பிட்ட மாநிலங்கள் முதலமைச்சர்கள், அவர்களின் பிரதிநிதிகள் ஒருவர் பின் ஒருவராக சென்னைக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான சஞ்சய் குமார் தாஸ் பர்மா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் மாணி உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்த விமானங்களில் சென்னை வர உள்ளதாகத் தகவல்.
கருத்துகள்