கஞ்சா வழக்கில் கைதாகி வெளிவந்த பின் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட்டு வந்த போது ரௌடி படுகொலை இருவர் படுகாயம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு முடித்து வெளி வந்த ரௌடி படுகொலை!
கொல்லப்பட்ட நபர் மனோஜ் (வயது 23) காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளி வந்தவரை பகலில் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து இலங்கைக்கு கடந்தவிருந்த 124 கிலோ கஞ்சாவை 2024 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக காரைக்குடி இரட்டை முனீஸ்வரன் கோவில் ஊருணி பகுதியைச் சேர்ந்த நபர் மனோஜ் உள்ளிட்டோரை குன்றக்குடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்த மனோஜ் காரைக்குடி நகரில் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இன்று காலை 10 மணிக்கு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு 2 இருசக்கர வாகனங்களில் அவரது நண்பர்கள் சபீக், கார்த்திக் ஆகியோருடன். டி.டி.நகர் 5-வது வீதியில் சென்ற போது, பின்புறமாக காரில் வந்த ஒரு கும்பல், அவர்களது இரு சக்கர வாகனங்களை இடித்துத் தள்ளியதில் நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தார். பின்னர் எழுந்து, 100 அடி சாலையில் ஓடினர். காரிலிருந்து இறங்கிய அந்தக் கும்பல், மூவரையும் வெட்டியதில் மனோஜ் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சபீக், கார்த்திக் ஆகிய இருவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன், கௌதமன் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தினர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்தனர்.
மேலும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவில், கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் காரைக்குடியில் ரௌடி மனோஜ் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..! : சிவகங்கை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பேட்டியளித்தார்.
கருத்துகள்