திருநெல்வேலி பாளையங்கோட்டை ரோஸ் மேரி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல்
ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டிலிருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும் அறமும் கிடைக்க வேண்டிய பள்ளிகளில் நடக்கும் இத்தகைய மோதல் நிகழ்வுகள் நடப்பது வேதனையான நிகழ்வு. இந்த சீரழிவை போக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்தி சரி செய்யப்பட வேண்டும்.
தென் மாவட்டங்களில் பல்வேறு காலங்கள் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டதும், தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டதும் என வன்முறை நிகழ்வுகள் தொடர்கிற செயல். இது நாகரிகத்தின் அழிவின் நிலையை எட்டி வருகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் என்பது ஏற்கமுடியாத செயல்இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றுள்ளார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெட்டப்பட்ட ஆசிரியரும் மருத்துவமனையில் உள்ளார்.
அரிவாளால் வெட்டிய மாணவன் பின்னர், பாளையங்கேட்டை காவல்நிலையத்தில் சரண் அடைந்தான். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நடத்திய.
முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவருக்கும், வெட்டுப்பட்ட மாணவருக்கும் இடையே 4 நாட்கள் முன்பாக பென்சில் கொடுப்பது தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது
நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி திறக்கப்பட்டதும், அரிவாளுடன் வகுப்பறைக்கு வந்த மாணவன் இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. ஒழுக்கம் என்பது கல்வியை விட மேலானது. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை' என்கிறது முதுமொழிக் காஞ்சி.
ஆனால், அண்மைக்காலமாக, கல்விச் சாலைகளில் ஏற்படும் முறையற்ற நிகழ்வுகள், கற்றல் காலத்தில் தன்னையே மாய்த்துக்கொள்ளும் கொடிய செயல்கள், பெற்ற கல்வியறிவை வெறும் உயர் பணிக்காக மட்டும் எண்ணல், பயிற்று மொழிதான் உலகறியச் செய்யும் என்றெண்ணி தாய்மொழியை ஒதுக்கல், பிறந்த மண்ணின் மாண்பை மறந்து பிறமொழி நாகரிகத்தில் ஒட்டி உறவாடல் - இவையெல்லாம் இன்றைய இளைஞர்களின் நனிமிகு நாகரிகமாக விளங்குவதைக் கண்டால் நெஞ்சம் பதைக்கிறது.
நம் பண்டைய கல்வி முறையில் கல்வி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. "அ' விற்கு "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றது. "அறம் செய விரும்பு', "ஆறுவது சினம்', "ஊக்கமது கைவிடேல்', "எண் எழுத்து இகழேல்', "ஓதுவது ஒழியேல்' என்று அறத்தின் வழிப் பொருளீட்டி வாழ வகை செய்தது.
ஆனால், இன்றைக்கு, தொலைக்காட்சி, திரைப்படம், கைப்பேசி, கணினி என வெகுமக்கள் செய்தித் தொடர்பால் தடம் மாறித் தொலைந்துவிட்ட இளையோரை மீட்டுருவாக்கம் செய்யபோவது யார்? பண்டைய கல்விமுறை, அறம், ஒழுக்கம், அன்பு, ஈகை, பெற்றோரைப் பேணிக்காத்தல் ஆகிய நற்பண்புகளை வெளிக்கொணர்ந்தது. ஆனால், இன்றைய கல்விமுறை அதிலிருந்து விலகி வெகு தொலைவு சென்றுவிட்டது.
பிள்ளை நெறி தவறும்போது அன்பு காட்டி அரவணைத்து உன் துன்பங்கள் நீக்க நாங்கள் உடன் இருக்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வைப் பெற்றோர் தர வேண்டும். குழந்தைகள் மனம் விட்டுப் பெற்றோரிடம் பேசும் துணிவை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மொத்தத்தில் குடும்ப அன்பும் அரவணைப்புமே ஒரு குழந்தையை அதன் பாதையில் இருந்து தடம் பிறழாமல் காக்கும்.அல்லலுறும் மனங்களை ஆற்றுப்படுத்த, பள்ளி, கல்லூரி காலங்களில் தாய்மொழியில் கற்ற அற இலக்கியங்கள் அவர்களுக்குத் தாயாகத் துணைநின்று அன்புடன் பரிவையும் மனத்தெளிவையும் உண்டாக்குமென்பதை இன்றைய இளையோர் உய்த்துணர்தல் வேண்டும்.
கருத்துகள்