பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் இந்திய முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இன்று டில்லியில் உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன்,எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல்கள், மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்தகா கூட்டத்தில், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல், அதற்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பதிலடி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவத் தளபதிகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு மரண அடி கொடுக்க வேண்டியது அவசியம். நமது முப்படைகளின் திறன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எதிரிகள் மீது எந்த நேரத்தில் எந்தவகையில் எந்தஇலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதை படைகள் தாங்களே முடிவு செய்யலாம், என்றார்.தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!
பஹல்காம் தாக்குதல் காரணமாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று(புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சற்று நேரத்திற்கு முன்னர் இந்தக் கூட்டம் முடிவடைந்ததையொட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதன்படி 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராணுவப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கு விமானப் படையின் முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு ராணுவ முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், முன்னாள் கடற்படை அதிகாரி மோன்டி கன்னா,
இந்திய காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ராஜீவ் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங் ஆகியோர்
ஐ.எஃப்.எஸ். பதவியிலிருந்து ஓய்வு பெட்ரா பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் இந்த குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்